உச்சநீதிமன்றத்தில் புதிதாக ராமன் பாலம் வழக்கை தள்ளுபடி செய்ய மனு

புதுடில்லி,பிப்.12- ராமன் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்தார். அதில், ‘ராமன் பாலத்தை  தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கூடாது. இது, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டவை கிடையாது. இது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மணல் திட்டுகள் மட்டுமே. இதற்கு ஆதாரமாக பல்வேறு தொல்லியல் ஆய்வு முடிவுகள் உள்ளன. இதைத்தவிர ராமன் பாலம் என்பதின் ஒரு பகுதி மட்டுமே இந்திய எல்லைக்குள் உள்ளன. மற்ற பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. ஒருவேளை இது தேசிய புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டால், இந்திய எல்லைக்குள் உள்ள பகுதிகள் பாதுக்கப்படும். ஆனால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை எப்படி பாதுகாக்க இயலும்?அதனால், இந்த விவகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறப்பட் டுள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image