திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டங்கள்

குமரி மாவட்ட இளைஞரணி கலந்துறவாடல் கூட்டத்தில் தீர்மானம்

நாகர்கோயில், பிப். 9- கலந்துரை யாடல் கூட்டத்தில் கன்னியா குமரி மாவட்ட கழக இளை ஞரணி செயலாளர் எஸ். அலெக்ஸாண்டர் தலைமை தாங்கினார்.  மாவட்ட கழக தலைவர் எம்.எம். சுப்பிர மணியம்  முன்னிலை வகித்து உரையாற்றினார்.

கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக் கவுரையாற்றினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் .சிவதாணு, இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுரா சன், கு.சந்திரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.

கழக மாவட்ட அமைப் பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மு. சேகர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநகரத் துணைத் தலைவர் கவிஞர் . செய்க் முகமது,    கழக இளைஞர் அணி தோழர் கள் தமிழ் அரசன், இரா.முகிலன், திலகா, முகிலன், உதயா, பி.கென்னடி, செல் லையா, சி.அய்சக் நியூட்டன், பன்னீர்செல்வம், பிராங்கி ளின், முத்துவைரவன்,  ஜெபர் சன், சாமுவேல்மற்றும்  ஏரா ளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியார் நெறிகள் 10 என்ற உறுதிமொழியை மாவட்ட தலைவர் எம்.எம். சுப்பிரமணியம் கூற தோழர் கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கலந்து கொண்ட தோழர்க ளுக்கு திராவிட உணர்வு குறித்த கருத்துகளை மூத்த தோழர்கள் கூறினர்.

நரேந்திர தபோல்கர் விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்க ளுக்கு   வாழ்த்துகள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.  விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இத ழுக்கு சந்தா சேர்த்து கொடுப் பது எனவும், திராவிடம் வெல்லும் தலைப்பில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் தொடர் பிரச்சாரம் நடத்துவது எனவும், நாகர் கோவில் மாநகரில் பழுத டைந்த  சாலைகளை சீர மைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று நாகர் கோவில் மாநகராட்சியை வலியுறுத்தியும் தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.

Comments