கரோனா பரவல் குறைந்து வந்தாலும் எந்த நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனீவா, பிப். 14- உலக சுகா தார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது: தொடர்ந்து 4ஆவது வாரமாக கரோனா வைரஸ் பெருந்தொற்று பர வல், உலக அளவில் குறைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 2ஆவது வார மாக கரோனா உயிர்ப்பலி எண்ணிக்கை சரிந்துள்ளது.

பல நாடுகளிலும் பொது சுகாதார நடவடிக்கைகளை மிக தீவிரமாக நடை முறைப் படுத்தி உள்ளதின் விளைவு தான் இது என்று தோன்று கிறது. இதற்காக நாம் ஊக்கம் அடையலாம். ஆனால் இதில் மன நிறைவு கொள்வது என் பது அந்த வைரசைப்போலவே ஆபத்தானது. தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தும் தருணம் எந்த நாட்டுக்கும் வரவில்லை. எனவே, கட்டுப் பாடுகளை தளர்த்தக்கூடாது. அதே போன்று எந்த தனி நபரும் கரோனா கால பாது காப்பு அம்சங்களை குறைப்ப தற்கான தருணமும் இது அல்ல. தடுப்பூசிகள் தயாரிப்பு தொடங்கி உள்ள நிலையில் நேர்ந்துள்ள ஒவ்வொரு உயிரிழப்பும் மிகுந்த சோகத் துக்குரியதுதான். கரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றி ஆராய உகான் நகருக்கு சமீபத்தில் உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சென் றது. அவர்கள் கண்டறிந்துள் ளவை குறித்து அடுத்த வாரம் அறிக்கை வெளியிடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவிலுள்ள வூகான் நக ருக்கு சென்ற உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர் குழு தலைவர் பீட்டர் பென் எம்பரேக் நேற்று முன்தினம், “எங்களது குழு சென்ற உகான் பரிசோதனைக்கூடங் கள், கரோனா வைரசை ஏற் படுத்துகிற வைரசுடன் வேலை செய்யவில்லை. கரோனா வெடிப்பதற்கு முன்பாக அவர்களது சேகரிப்பிலும் இல்லை. ஆனால் இன்னும் பகுப்பாய்வு செய்யப்படாத மாதிரிகளில் கூட கரோனா வைரஸ் இருக்கக்கூடும்என கூறியது என்பது குறிப்பிடத் தக்கது.

Comments