"தமிழகத்தில் வேலைவாய்ப்பை உறுதி செய்வோம்’’ மூன்று மாதத்தில் ஆட்சி மாற்றம் உறுதி

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் திட்டவட்டம்

பெரம்பூர்,பிப்.11-திமுக தலைவரும் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பின ருமான தளபதி மு..ஸ்டாலின் நேற்று  10.2.2021) கொளத்தூர் தொகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டார்.

அதன் ஒரு பகுதியாக, கொளத்தூர் தொகுதிக்கு உட் பட்ட திருவள்ளுவர் சாலை யில் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அனிதா அக்சீ வர்ஸ் அகாடமி நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த 81 மாணவி களுக்கு மடிக் கணினி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட் டினார்.

அந்த அகாடமியில் பயிற்சி பெற்றுவரும் 89 மாணவி களுக்கு நோட்டு, பேனா வழங்கினார்.செம்பியம், லூர்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு திடலை மேம்படுத்தி, கூடைப் பந்தாட்ட கூடம் அமைக்க மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அங்கு பயிலும் 500 மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங் கினார். பந்தர் கார்டன் மேல் நிலைப் பள்ளி கட்டி டத்தை திறந்து வைத்தார். அப்பள்ளி மாணவ-மாண விகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதன்பிறகு தளபதி மு..ஸ்டாலின் பேசியதாவது;

அனிதாவின் பெயரில் பயிற்சி மய்யத்தை கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கி னேன். பெண்களின் கல்விக் காக இலவசமாக துவங்கப் பட்ட இந்த மய்யத்தில் பலர் வேலைவாய்ப்பு பெற்று வரு கின்றனர். இதனால் அவர் களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு 348 மாணவிகள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள் ளனர். தற்போது 81 பேர் பயிற்சி பெறுகின்றனர். தமிழ கத்தில் வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்துள் ளது. லட்சக்கணக்கானோர் வேலையின்றி உள்ளனர். அதை பற்றி அதிமுக அரசு கண்டு கொள்வதில்லை. இன்னும் 3 மாதத்தில் ஆட்சி மாறவுள்ளது. அப்போது இளைஞர் களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வோம். திமுக தலைவர் என்ற முறை யில் சொல்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட் டங்களிலும் அனிதா அச் சீவர்ஸ் அகாடமி ஏற்படுத்தப் படும். இது, திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.  இவ்வாறு கூறினார்.

Comments