நியாயத்தின் பக்கம் நின்றால் வெற்றி நிச்சயம் "பெரியார் விருது" பெற்ற இயக்குநர் கரு.பழனியப்பன் உரை

சென்னை, பிப். 5- நியாயத்தின் பக்கம் நின்றால் வெற்றி நிச்சயம் என்றார் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்கள்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 27ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் விழா 16.1.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. விழாவில்  பெரியார் விருது' பெற்ற  இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்கள்  உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

Meticulous Administrator

‘‘அவர் அரசியல், இயக்கம் என்ற பணிக்குச் சென்று விட்டார். அப்படியில்லாமல் இருந்திருந்தால்  அவர் அரசு பணிக்குச் சென்றிருந்தால், Meticulous Administrator மிகப் பிரமாதமாக வந்திருப்பார்.'' என்றார். எல்லா தகவல்களிலும்,  எல்லா அறிவிலும், அதற்குள்  இருக்கும் நுண்ணறிவைப்பற்றிய அக்கறை செலுத்துவது.

ஆசிரியரைப்பற்றி சொன்னார் என்றால், அப்படி என்றால், ஆசிரியர் எங்கே இருந்து பெற்றார் என்றால், தந்தை பெரியாரிடமிருந்துதான்.

இன்றைக்கு இங்கே வரும்பொழுதே ஒன்றை யோசித் துக் கொண்டு வந்தேன். இங்கே யாரிடமும், பெரியாரின் தனிக் குணங்களை, சிறப்புகளை, அவருடைய வாழ்வில் நடந்ததைப்பற்றி பேசக்கூடாது என்று. ஏனென்றால், போஸ் வெங்கட் உள்பட, என்னைவிடவும் பெரியாரைப் பற்றி அறிந்தவர்கள் நிரம்பியிருக்கின்ற அரங்கத்தில் நாம் அதைப்பற்றி சொல்லக்கூடாது; அது அவசியம் இல்லை என்று நான் நினைத்தேன்.

அவாள்' தோல்வி பெறுவது

அவாளுக்கு' உறுதியாகத் தெரியும்

சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது; குருமூர்த்தி பதை பதைப்பதைப் பார்த்தால், உறுதியாக தி.மு.. வெற்றி பெறும். ஏனென்றால், அவாளுக்கு கரெக்டாக தெரியும். ‘அவாள்' வெற்றி பெறுவது தெரியுமோ, தெரியாதோ ஆனால், தோல்வி பெறுவது உறுதியாகத் தெரியும்.

அதைத்தான், துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் சொன்னார், எப்படி இந்து சமயம் என்று அச்சடித்த போஸ் டர், அடுத்த நாளே இந்திய சமயமாக மாறியது என்று.

அவாளுக்குக் கரெக்டா தெரியும்; எப்பொழுதெல்லாம் பின்வாங்கவேண்டும்; எப்பொழுதெல்லாம் மறையணும்; எப்பொழுதெல்லாம் பதுங்கவேண்டும் என்று அவா ளுக்குத் தெரியும்.

நாம்தான் புரியாமல், எல்லாவற்றிற்கும் ஏறி அடிப்ப வர்கள். நாம்தான் எப்பொழுதும்  மானமிகு' - அவாள் எப்பொழுதும் அவமானமிகுதான்.

ஒருவராவதுமானமிகு' என்று போட்டுக்கொள் வார்களா என்று பாருங்கள், போட்டுக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், அவாளுக்குக் காரியம்தான் முக்கியம்.

ஒரு மாதம் கொஞ்சம் பின் சென்று யோசித்துப் பாருங்கள், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று  ஒருவேளை சொல்லியிருந்தால்,  துக்ளக்' ஆண்டு விழா எப்படி நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்; சசிகலாவைப்பற்றி ஒரு வரிகூட பேசியிருக்க மாட்டார்கள்; .தி.மு..வைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசியிருக்க மாட்டார்கள். ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர். ஆக்கப்பட்டு இருப்பார். அமித்ஷா, மிகப்பெரிய ராஜதந்திரியாக ஆக்கப்பட்டு இருப்பார். விமான நிலையத்திலிருந்து, ‘துக்ளக்' ஆண்டுவிழா நடைபெறும் அரங்கு வரையிலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கும். மிகப்பெரிய சாதனையை செய்ததாக குருமூர்த்தி நடுநாயகமாக அமர்ந்திருப்பார். அப்படி எதுவும் இல்லாமல், ஜே.பி. நட்டாவை அழைத்துதுக்ளக்' ஆண்டு விழாவை நடத் தினார்கள். நட்டா யார் என்று அந்த விழாவிற்கு வந்தவர் களில் பாதி பேருக்குத் தெரியாது, முகத்தைக் காட்டினாலே - இதில் முகக்கவசம் அணிந்திருந்ததால், சுத்தமாக தெரிய வில்லை.

.இராசா ஊழல் செய்துவிட்டாராம் - இவர்களை வைத்துக்கொண்டு தி.மு.. ஊழலைப்பற்றி பேசுகிறதாம்.

ஆனால், யாரை வைத்து தி.மு..வை ஜெயிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள் தெரியுமா? ஊழல் குற்றம் செய்ததாக சிறைத்தண்டனை பெற்று, தண்டனை முடிந்து வெளியில் வரும் சசிகலாவை வைத்து ஜெயிக்க வேண்டுமாம்.

டேய், மானங்கெட்டவர்களே, என்ன பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிகிறதா?

.இராசா ஊழல் குற்றம் செய்தார் என்று நிரூபிக்கப் படவில்லை; அவர் ஒவ்வொருவரையும், விரலை சுண்டி சுண்டி வா என்மீது வழக்குத் தொடுங்கள், குற்றத்தை நிரூபியுங்கள் என்று சொல்கிறார். ஆனால், அவர்களால் அது முடியவில்லை.

.இராசாவை வைத்துக்கொண்டு, தி.மு.. ஊழலைப் பற்றி பேசுகிறார்களே என்று பேசுகின்ற குருமூர்த்தி, ஊழல் குற்றம்  நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்று, தண்டனை முழுமையடைந்து வெளியில் வருகின்ற சசிகலாவை வைத்து, தி.மு..வை வீழ்த்தவேண்டுமாம், இதுதான் அதற்கான வாய்ப்பாம்.

பார்ப்பான் என்ன முடிவெடுக்கின்றானோ

அதற்கு நேர் எதிராக முடிவு செய்யுங்கள்!

இப்படி பல பேர், பல காலமாய் கிளம்பியிருக்கிறார்கள். பெரியார் சொன்ன ஒன்றை நான் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. எல்லாவற்றிலும் நாம் சரியான முடிவை எடுக்க முடியாது. சில நேரங்களில் தடுமாறுவோம்; குழப்பம் அடைவோம்.

ஆகையால், பெரியார் என்ன சொன்னார் என்றால், பார்ப்பான் என்ன செய்கிறான் என்பதைப் பாருங்கள்; அதற்கு நேர் எதிராக முடிவு செய்யுங்கள்; அதுதான், நமக்கு நல்லது என்பார்.

ஒரே ஒரு பார்மூலாதான். அதைக் கடைப்பிடித்தால், நீ வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம். நியாயத்தின் பக்கம் நீ நிற்கவேண்டும் என்றால், அதுதான் சரியான முடிவு. ஏனென்றால், பார்ப்பான், உறுதியாக தீமையின் பக்கம்தான் நிற்பான். அதில் ஒன்றும் உங்களுக்குக் குழப்பம் வேண்டாம்.

குருமூர்த்தி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், எப்படியாவது தி.மு.. தோற்கவேண்டும் என்று. ஆகவே, நாமெல்லாம் எந்தப் பக்கம் நிற்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதை அனை வரிடமும் பகிருங்கள்.

போஸ் வெங்கட் அவர்கள் இங்கே உரையாற்றும் பொழுது, ‘‘என்னுடைய திரைப்படங்கள் எப்பொழுதும் பெரியாரில் தொடங்கும், பெரியாரில் முடியும்'' என்றார்.

எனக்கு எப்பொழுதும், திரைப்படம் என்பது அதை ஒரு வேலையாக, இரண்டாம் பட்சமாகத்தான் கருதியிருக் கிறேன். என்னுடைய படைப்புகளில், என்னுடைய கருத்து களைப் பேசியது இல்லை. என் கதைகள், அந்தக் கதை, அந்தக் கதையினுடைய கதாபாத்திரம் என்ன - அதை யொட்டித்தான் அந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறேன்.

என்னுடைய செயலுக்குக் கிடைத்த

பெரியார் விருது'!

இந்த விருது வாங்கியதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி  என்னவென்றால்,  எப்பொழுதும் ஒரு படைப் பாளிக்கு, படைப்பின் பெயரால், படைப்பின் காரணமாக விருது வழங்கப்படும். எனக்கு அப்படித்தான் வாழ்நாள் முழுவதும் விருதுகள் கிடைத்திருக்க முடியும். செயலின் காரணமாக கிடைத்த விருது இது என்பதால், மிக முக்கியமான விருதாக இதனை நான் நினைக்கிறேன்.

அடுத்த படம் என்னவென்று நான் திட்டமிட்டது கிடையாது; எதையும் நான் திட்டமிட்டது கிடையாது. என்னுடைய போக்கில்,  பார்த்துக் கொள்ளலாம் என்று தான் இருப்பேன். பெரிய லட்சியங்கள், நோக்கங்கள் பெரிதாக இருந்ததில்லை, பொருளாதார ரீதியாக. ஆகை யால், திரைப்படம் எடுப்பதில், பதற்றம் என்பது எனக்குக் கிடையாது.

ஆனால், எனக்கு ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசை உண்டு. பெரியாரின் வாழ்வை, மறுபடியும் ஒருமுறை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

எப்பொழுதும் சிறந்தது - பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹாலிவுட்டில் எடுக்கப்படுகிறது. அங்கே அய்ந்து டைட்டானிக் இருக்கிறது. ஒருவர் டைட்டானிக் எடுத்து விட்டாரே, என்று இன்னொருவர் எடுக்காமல் இல்லை. ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக ஒவ் வொரு இயக்குநரும், ஒவ்வொரு விதமாக எடுக்கிறார்கள்.

அதேபோன்று, பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை இந்தத் தலைமுறைக்குச் சொல்வதற்கு - அப்படி ஒரு ரசிக்கின்ற ஹீரோ யார் என்றால், பெரியார்தான். என் வாழ்வில் எனக்கு ஹீரோ யார் என்றால், பெரியார்தான் ஹீரோ.

யார் ஹீரோ? எந்தக் காரியத்தை நம்மால் செய்ய முடியாதோ, அதையெல்லாம் மிக அனாயசமாக செய் பவர்தான் ஹீரோ.

இன்றைக்கு இந்த விழாவிற்கு வரும்பொழுது, செந்திலிடம் தொலைபேசியில் பேசும்பொழுது சொன்னார், ‘‘பெரியார் செய்தது போன்று, நம்முடைய வாழ்க்கையில் 15 சதவிகிதம்கூட செய்ய முடியவில்லையே, தோழர்'' என்றார்.

உடனே நான் சொன்னேன், ‘‘, உங்களால் 15 சத விகிதம் முடிகிறதா?'' என்றேன்.

போஸ் வெங்கட் சொன்னதைச் சொல்கிறேன், ‘‘பெரியாரில் தொடங்கி, பெரியாரில் முடிப்பேன் '' என்று சொன்னார் அல்லவா, பெரியாரையே நான் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்று நினைத்தவன். பெரியார் திரைப்படம், கமர்ஷியல் படம் இல்லை என்று நினைக் கலாம்; ஆனால், நான் சொல்கிறேன், பெரியாருடைய வாழ்வுதான், மிகச்சிறந்த கமர்ஷியல். அதைப்போன்ற ஒரு வியாபாரப் படம்  - எல்லோரும் ரசிக்கின்ற படம் வேறு இருக்க முடியாது.

ஏனென்றால், கே.ஜி.எப். என்ற ஒரு திரைப்படத்தில், அருமையான வசனம் ஒன்று, ‘‘டேய், அவன் 10 பேரை அடித்து டான் ஆனவன் இல்லையடா; அவன் அடித்த 10 பேரும் டான்தானடா'' என்று வரும்.

பெரியார், இந்தியாவில் அடித்த

அத்தனை பேரும்டான்'தான்!

அதுபோல பெரியார், இந்தியாவில் அடித்த அத்தனை பேரும் டான்தான். அதுவரையில் , யாரெல்லாம் டான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களோ, அந்த டானை யெல்லாம் போகிற போக்கில் தள்ளிக் கொண்டு போனவர் தந்தை பெரியார். இவன் டானா? இவன் டானா? என்று.

அய்யய்யோ, அவர்கள் மிகக் கொடூரமானவர்கள்; அவர்கள் நம்மைக் கொன்றுவிடுவார்கள். அங்கேயெல் லாம் நம்மால் போகவே முடியாது என்று சொல்லுவார்கள்.

அங்கே போய் பெரியார் அவர்கள் உட்கார்ந்தார். யாரையெல்லாம் இவர்கள் புலி, சிங்கம், கரடி என்று சொன்னார்களோ,  அவையெல்லாம் பெரியாருடைய காலடியில் அமர்ந்தன.

எதையெல்லாம் வீழ்த்த முடியாது என்று நம்பினார் களோ, அதையெல்லாம் வீழ்த்தினார். இடைப்பட்ட ஒரு காலகட்டத்தில், நாம் நன்றாக ஆகிவிட்டோம் என்று நினைத்ததினால், ‘‘திராவிடத்தால் வீழ்ந்தோம்'' என்று சொல்லிக்கொண்டு, ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.

பெரியாரைப்பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கவேண்டும்

இப்பொழுது அவர்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், பெரியார் திடலில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், இங்கே மானமிகு ..நடராசன் அவர்கள் சொன்னதுபோன்று, இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் செய்வதைக் காட்டினாலும், அதற்கு வெளியில் உள்ள வர்கள், இந்தத் தலைமுறையினருக்குப் பெரியாரைப்பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கவேண்டும்.

பெரியார் திடலில் இன்றைக்கு, இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் உள்பட வந்திருக்கிறார்கள். இந்தப் பொங்கல் மிக முக்கியமான பொங்கலாக நான் நினைக்கிறேன். தமிழ் நாட்டில், எப்பொழுதும் கிறித்தவர்களாலும், இஸ்லாமியர் களாலும், எல்லா மதத்தினராலும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர் திருநாள் -அதற்கு மதம் கிடையாது.

இதுவரையிலும், இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் வைத்த பொங்கலை நீங்கள் முன்பெல்லாம் பார்த்திருக்க முடியாது - அது பத்திரிகைகளிலும் வெளிவராது. இந்த ஆண்டுதான், குறிப்பாக சர்ச் முன்பு கிறித்தவர்கள் பொங்கல் வைப்பதும்  - இஸ்லாமிய பெண்கள் பொங்கல் வைப்பதையும் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். ஏனென்றால், இந்த ஆண்டுதான், பி.ஜே.பி.காரர்கள் பொங்கல் கொண்டாடுகிறார்கள் - இதுவரையில் அவர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடியது கிடையாது. அவன் கொண்டாடியதும்,  பாருங்கள் கிறித்தவர்களும், இஸ்லாமி யர்களும் கொண்டாடிய பொங்கல் விழாவை பத்திரிகை களில் வெளியிடுகிறார்கள். அப்படியென்றால், நாம் சும்மா இருந்தாலும், நாம் என்ன செய்யவேண்டும் என்று அவர் கள் முடிவு செய்கிறார்கள்.

தொடர்ச்சியாக தந்தை பெரியாரின் கருத்துகளை, செய்திகளை இன்றைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.

ஆனால், அவாள் என்ன சொல்வார்கள், பெரியாரைப்பற்றி? அவர் சாமி கும்பிடமாட்டார்; அவர் ஆன்மிகத்திற்கு எதிரானவர் என்று சொல்லுவார்கள்.

பெண்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார்!

அதெல்லாம் சரி, உன்னுடைய வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறதே - அந்தப் பிள்ளைக்கு சொத்துரிமை வந்ததற்குக் காரணம் அந்தக் கிழவன்தான் - உன்னுடைய பெண் பிள்ளைகளைப் பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றால்,  உடனே உள்ளே சென்று விடுவான். ஏனென்றால், பெண்கள் பேசினால், பயப்படுபவர்கள் அவர்கள்.

நாம்தான், பெண்களுக்கு சமத்துவம் அளித்திருக்கி றோம். பெண் விடுதலை என்று சொல்லக்கூடாது; பெண் சமத்துவம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு விடுதலை என்றால், ஆண் எஜமானன்; பெண் அடிமை என்று அர்த்தமா? பெண் சமத்துவம் என்று சொல்லுங்கள் என்போம்.

நான் உறுதியாக நம்புவது, எப்பொழுதும் பெண்கள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்லு வது கிடையாது. ஆனால், அவர்களுக்குத் தெரியும்; நான் இந்த நிலைக்கு வந்ததற்கு பெரியார்தான் காரணம் என்று.

லட்சுமி என்கிற ஒரு ஆசிரியர் நேற்று முகநூலில் பதிவிட்டு இருக்கிறார். ‘‘நான் ஈரோட்டிற்குச் சென்றிருந் தேன்; அங்கே பெரியார் நினைவு இல்லத்தைப் பார்த்தேன்; பார்த்து வெளியே வந்த பிறகு, மனம் முழுவதும் பெரியாரின் நினைவலைகள்; அய்யா, நீங்கள்தான் பெண்களின் கைகளில் இருந்த கரண்டியைப் பிடுங்கி, புத்தகத்தைக் கொடுக்கவேண்டும் என்று முதன்முதலாகச் சொன்னவர். ஆகையால், இன்றைக்கு நான் ஆசிரியராக இருக்கிறேன்'' என்று.

இப்படி அவர் போன்று தொடர்ச்சியாக, தந்தை பெரியாரை எல்லோரும் எடுத்துக்கொண்டு போய், இந்தத் தமிழ்நாட்டினர் மற்ற மாநிலங்களை விட வேறுபட்டவர்கள் என்று காட்டவேண்டும்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், பீகாரைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மேலே வரவேண்டும் என்றால், வரவேண்டும்தான்; அவர்கள் மோசமாக இருக்கிறார்கள்; மேலே வரவேண்டும். ஆனால், நாம் ஏற்கெனவே நன்றாக வாழ்ந்தவர்கள்; அவர்களோடு சேர்ந்து கீழே போய் விடக்கூடாது.

ஒவ்வொருவர் வீட்டிலும்

தந்தை பெரியார் படம் இருக்கவேண்டும்!

கொல்கத்தாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இரவீந்திரநாத் தாகூர் படம் இல்லாமல் இருக்குமா? அப்படி தமிழ்நாட்டில் நன்றாக நீங்கள் சாமி கும்பிடுங்கள்; சாமிப் படத்திற்குப் பக்கத்தில், பெரியார் படத்தை வாங்கி மாட்டி வைத்துக் கொள்ளுங்கள். சாமி படத்தை இவ்வளவு கவுரவமாக நாம் கும்பிடுவதற்குக் காரணம், அதற்குப் பக்கத்தில் இருக்கும் கிழவன்தான் என்று நினையுங்கள்.

இதை சாமி கும்பிடுகிறவர்கள் அனைவருக்கும் நாம் ஞாபகப்படுத்தவேண்டும். அந்த வேலையை மேலும்  ஊக்கமுற செய்வதற்கு, இந்த விருது காரணமாக இருக்கும் என்று நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு  இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்கள்  உரையாற்றினார்.

Comments