புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையை கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர்

புதுச்சேரியில் பிஜேபியின் அரசியல் பேரத்தை கண்டித்து தமிழர் தலைவர் விடுத்த அறிக்கையை புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் முதலமைச்சர் வி.நாராயணசாமி அவர்களிடம் அளித்தார்கள். அப்போது கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், அரசு கொறடா அனந்த ராமன், சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி உள்பட பலர் உடனிருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்கள் உள்பட பொதுமக்களிடமும் கழகத் தலைவரின் அறிக்கை வழங்கப்பட்டது.

Comments