அனைத்து அதிகாரத்தையும் தன்னிடம் குவித்து நியமன பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து பா.ஜ.க. அரசை கொண்டுவர திட்டமிடுகிறாரா தமிழிசை?

புதுச்சேரி, பிப். 22- புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக பெறுப்பேற்ற தமிழிசை அனைத்து அதிகாரிகளை  பணியிடை மாற்றம் மற்றும் பதவி நீக்கம் செய்து புதிய அதிகாரிகளை நியமித் துள்ளார். மேலும் மாநில அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி களின் பட்டியலையும் கேட்டுள்ளார். இதன் மூலம் புதுச்சேரி மாநில அதிகாரம் அத்தனையும் தன்னிடம் குவிக்கும் திட்டதோடு செயல்பட்டு வருவதாக புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தெரி விக்கின்றது. புதுச்சேரியில் முதல்வர் நாராயண சாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இன்னும் ஒரு மாதமே தேர்தல் இருக்கும் நிலையில்  கிரண்பேடி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தெலுங்கானா ஆளுநர் தமி ழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

தமிழிசை புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக பொருப்பேற்ற உடனேயே புதுச்சேரி அரசின் மீது நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்து விட்டார், தான் பதவியேற்ற உடனேயே புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட கையோடு முக்கிய அதிகாரிகளை நியமனம் செய்து வருகிறார். கிரண்பேடி பதவியில் இருந்த போது ஆளுநர் மாளிகையில் இருந்த பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய அதிகாரிகளை நியமித்தும், முக்கிய அரசுத்துறை தொடர் பான அதிகாரிகளின் விவரங்களையும் கேட்டு வருகிறார். பெரும்பான்மை இல்லாமல் புதுச் சேரி முதல்வர் நாராயணச்சாமி ஆட் சியை இழக்கும் பட்சத்தில் குறுகிய காலத்திற்கு தற்போது உள்ள அதிமுக என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக வைச்சேர்ந்த மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து பாஜக அரசை உருவாக்கும் திட்டத்தோடு இவரை புதுச்சேரிக்கு அமித்ஷா அனுப்பியதாக கூறப்படும் நிலையில் தமிழிசையின் நடவடிக்கைகள் இதை உறுதிசெய்துள் ளதாக தெரிகிறது. புதுச்சேரி மாநில அரசியலைக் கூர்ந்து கவனித்துவரும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments