கரோனாவுக்கு புதிய சொட்டு மருந்து


புதுடெல்லி, பிப். 12: கரோனாவுக்கு மூக்கு வழியாக போடப்படும் சொட்டு தடுப்பு மருந்தை, இந்தியாவின் பயோ டெக் நிறுவனம் தயா ரித்துள்ளது. இதன் முதல் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கேட்டு இந்த நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.

இவை தவிர, இன்னும் 7 கரோனா தடுப்பூசிகளை இந் தியா கண்டு பிடித்துள்ளது. அவற்றின் பரிசோ தனை பல்வேறு கட்டங்களில் உள்ளன. இவையும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்போது பயன் படுத்தப்படும் கரோனா தடுப்பு மருந் துகள் அனைத்தும், ஊசியின் மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. இந்த சிறிய வலிக்கு கூட இடம் கொடுக் காமல், மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை இந்தியா கண்டுபி டித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை கண்டு பிடித்துள்ள பாரத் பயோ டெக் நிறுவ னம்தான், இந்த அரிய சாதனையை செய்துள்ளது. உலகின் வல்லரசு நாடு களான அமெரிக்கா, ரஷ்யா போன் றவை கூட, இந்த தடுப்பூசி விவகாரத்தில் பின்தங்கி விட்டன. ஆனால், ஒன்று இரண்டு என்று இல்லாமல் பத்து தடுப்பூசிகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியா, இதன் மூலம் மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையை செய்யக் காத்திருக்கிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் வெற்றிகரமாக பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், உலகின் மருந்து சாம்ராஜ்யத்தில் இந்தியா அமரும் நிலை உருவாகும் என்று மருத்துவ உலகம் கூறி வருகிறது.

மூக்கு வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்து, உலகளவில் ஏற்கெனவே 3 மருந்துகள் பயன்பாட் டுக்கு வர உள்ளன. இந்த நாசி வழி கரோனா தடுப்பு மருந்து, உலகளவிலும் மிகப் பெரிய மாற்று சக்தியாக விளங் கும் என்று நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.

எலி, பன்றி போன்ற விலங்குகளி டம் இந்த நாசிவழிதடுப்பு மருந்தை செலுத்தி பாரத் பயோடெக் நிறுவனம் நடத்திய பரிசோதனை சிறந்த பலனை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல் டோஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதில், இந்த விலங் குகளின் உடலில் கரோனா எதிர்ப்பு சக்தி மிகுதியாக உருவாகி இருக்கின்றது. இதனால், மனிதர் களுக்கு இதை அளித்து முதல்கட்ட பரிசோதனை செய்வதற்கான அனுமதியை அளிக்கும் படி, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பாரத் பயோடெக் விண்ணப் பித்துள்ளது.

இந்த நாசி வழி தடுப்பு மருந்து ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது என்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஊசி இல்லாத, வலி இல்லாத, ஒரு டோஸ் அளவே போது மானது போன்றவை முக்கிய காரணங் களாக கருதப்படுகின்றன. அதே நேரம், இவை  மிகுந்த எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன், கரோனா பரவலை கட்டுப்படுத்தித் தடுக்கவல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments