பாஜக பிரமுகர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது

கோவை,பிப்.12- மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் பா..கட்சியின் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்த  பா... மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் (54) என்பவர் இஸ்லாம் குறித்தும், முகமது நபி குறித்தும் ஆட்சேபகரமாக பேசியதாக தெரிகிறதுஇவர் பங்கேற்ற கூட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் 17 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கல்யாணராமன் உட்பட 2 பேரை கைது செய்தனர். அவர்கள் ஈரோடு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் பிணை வழங்க கோரி கல்யாணராமன் தரப்பில் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை  நடந்தது.

இதை விசாரித்த நீதிபதி சக்திவேல் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின்பேரில் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று (11.2.2021) மாவட்ட மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார்.

Comments