ஈரோட்டுப் பூகம்பம் முரசொலி முகிலன் நினைவேந்தல் - படத்திறப்பு

நாகை, பிப். 7- திராவிடர் கழகம், தி.மு. மேடைகளில் ஈரோட்டுப் பூகம்பம் என்னும் தலைப்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்திவந்த பெரியார் பெருந் தொண்டர் முரசொலி முகிலன் அவர்களின் நினை வேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 3.1.2021 அன்று காலை 10 மணியளவில் நாகை மாவட் டம் கீவளுர் ஒன்றியம் அத் திப்புலியூர், கலைவாணர் தெருவில் உள்ள அவரது இல் லத்தில் நடைப்பெற்றது. அவ ருடைய மகன் தம்பிரை வரவேற்க திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்விற்கு தலைமை வகித்து நினை வுரையாற்றினார்

நாகை மாவட்ட தி.மு. செயலாளர் என்.கவுதமன் படத்தினை திறந்துவைத்து நினைவுரையாற்றினார், ஒன்றிய தி.மு. செயலாளர் கோவிந்தராசன், நாகை மாவட்ட கழக இணைச் செய லாளர் பாவா. ஜெயக்குமார், மண்டல மகளிரணி செயலா ளர் கோ.செந்தமிழ்செல்வி, திருவாரூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் இரா.சிவக்குமார், திருவாரூர் நகர தி.மு. செயலாளர் வாகை பிரகாஷ்,நாகை மாவட்ட கழக செயலாளர் புபேஸ் குப்தா, திருவாரூர் மாவட்ட கழக தலைவர் வீ.மோகன், மாவட்ட துணைத் தலைவர் அருண் காந்தி, மாவட்ட துணைச் செயலா ளர் வீரையன், பரிதி, அங்காடி சேகர் உள்ளிட் டோர் இரங்க லுரையாற்றி னர்

உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர். கலி யுகபெருமாள் இரங்கல்பா  வாசித்தார்  மருமகன் நந்த கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Comments