தஞ்சையில் தந்தைபெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் தலைமையில் மாலை அணிவிப்பு

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி. அமர்சிங் அவர்களின் பவள விழா நேற்று (7.2.2021) காலை 10 மணி அளவில் நடைபெற்றது. முன்னதாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பவள விழா நாயகர் வழக்குரைஞர் சி.அமர்சிங் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார்மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments