உயர்த்தப்பட்ட உள்நாட்டு விமானக் கட்டணம்

 மும்பை, பிப்.14 நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு (2020) மார்ச் இறுதியில்  பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் படி,  2021  மார்ச், 25 முதல் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டதுபின்னர் மத்திய அரசு வழங்கிய தளர்வுகளைப் பொறுத்து, 2020ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மீண்டும் பல்வேறு கரோனா கட்டுப்பாடுகளுடன்  குறைந்த பயணிகளுடன் உள்நாட்டு விமா னங்கள்  இயங்கத் தொடங்கின.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பய ணிகள் இல்லாததால், குறைந்த பயணிகளைக் கொண்டு விமானங்கள் இயக்கப்படுவதால், பல விமான நிறுவனங்கள், பயணக் கட்ட ணத்தை  உயர்த்த முடிவு செய்தன. ஆனால் கட்டண உயர்வுக்கு மத்திய விமானப் போக் குவரத்து அமைச்சகம்  தடை போட்டது.  அதன்படி  ’40 நிமிட விமான பயணத்திற்கு குறைந்தபட்சம், 2,000 ரூபாயில் இருந்து அதிகப்பட்சமாக, 6,000 ரூபாய் வரை மட்டுமே, கட்டணம் வசூலிக்க வேண்டும்என, விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.

தற்போது கரோனா கட்டுக்குள் இருப்ப தால் பல விமான சேவைகள் வழக்கம்போல தொடங்கி நடைபெற்று வருகின்றன.  அதனால், விமான பயண கட்டண வரம்பை, மத்திய அரசு, 10-30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதனால், 40 - 210 நிமிடங்கள் வரையிலான விமான பயண கட்டணத்தில், குறைந்தபட்சம், 200 ரூபாய் முதல், அதிகப் பட்சம், 5,600 ரூபாய் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

 

Comments