டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· மத்திய அரசின் பட்ஜெட் குறித்தும் அதில் உள்ள தகவல்கள் முரணாக உள்ளதையும் மூத்த ஊடகவியலாளர் கரண் தாப்பர் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னை:
· புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அய்ந்து பேர் விலகியதை அடுத்து, வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட புதுச்சேரி கூடுதல் ஆளுநர் தமிழிசை சவுந்திரராசன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· அயோத்தியில் ராமன் கோவில் கட்ட கருநாடகாவில் வீடு தோறும் சில அமைப்புகள் கட்டாய வசூல் செய்துள்ளதை எதிர்த்து அம்மாநில முன்னாள் முதல்வர்கள் சித்தராமைய்யா, குமாரசாமி அறிக்கை விடுத்துள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் நாடு முழுவதும் குறிப்பாக அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங் களில்
நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தி ஹிந்து:
· மதுரையில் 2019இல் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவ மனை இன்னமும் கட்டி முடிக்கப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் மெத்தனத்தைக் சாடியுள்ளார்.
- குடந்தை கருணா
19.2.2021