பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 

சென்னை,பிப்.12-தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலை வர் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் நேற்று (11.2.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் செயல்பாட்டால், பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டர் ரூ.90அய் கடந்துள்ளது. சென்னையில் நேற்றைய விலையைவிட 22 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் 18 காசு களுக்கு ஒரு லிட்டர் பெட் ரோல் விற்பனையாகிறது. இரு சக்கர வாகனங்களைப் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலை யில், இந்த விலையேற்றம் என்பது அவர்களின் வாழ் வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடிய தாகும். அதுபோலவே, டீசல் விலை யும் 28 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 18 காசுக்கு விற்பனையாகிறது. சரக்குப் போக்குவரத்து - பயணிகள் போக்குவரத்து ஆகியவற் றுக்கு டீசல் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் கடும் தாக்கத்தை ஏற் படுத்தும் வகையில் இந்த விலையேற்றம் உள்ளது.  பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும், இந்தியச் சந்தையில் பெட்ரோல்,-டீசல் விலை குறைவதேயில்லை.

பெட்ரோலியப் பொருட் களின் மேல் மத்திய அரசின் கடுமை யான வரி விதிப்பும், மாநில அரசு சார் பிலான வரி விதிப்புகளும் மக்களை வதைக்கும் விலை உயர்வுக்கு காரணமாகின்றன. ஒரு லிட் டர் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும் என் கிற அச்சம் மக்களிடம் உள் ளது. அன்றாடத் தேவை யாகிவிட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வு வணிகம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் போது விலைவாசி கடுமை யாக ஏறும். அதுவும் மக்கள் மீதே சுமையாகும்.

கரோனா நோய்த் தொற் றுப் பேரிடர் காலத்தில் மக் களின் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. அதனால் உட னடியாக பெட்ரோல், டீசல் மீதான வரி களைக் குறைத்து விலைக் குறைப்புக்கு வழி வகுத்திடுக என மத்திய அரசை வலிறுத்துகிறேன். மாநில அரசுக்கும் இது பொருந்தும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments