எடப்பாடி ஆட்சியில் மாஸ்க் வாங்கியதிலும் ஊழல்

 கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

பள்ளிபாளையம், பிப். 14-  எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஊழல் இல்லாத துறைகளே இல்லை.  என, பள்ளிபாளையத்தில் நேற்று (13.2.2021) கனிமொழி எம்பி பேசினார்.

விடியலை  நோக்கி ஸ்டா லின் குரல் நிகழ்ச்சிக்காக, கனிமொழி எம்பி நேற்று காலை  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வந்தார். அங்கு. திறந்த வேனில்  நின்ற படி அவர் பேசியதாவது: 

இந்த ஆட்சியில் எதுவும் தரமாக இல்லை.  நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிக் கொண்டிருக்கும் போதே இடிந்து  விழுகிறது. ரேஷன்  கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமாகவே இல்லை. ஆட்சியை  காப்பாற் றிக்கொள்ள, டில்லி ஆட்சி யாளர்களுக்கு அடிமையாகி, தமிழ் நாட்டையும்,  தமிழ் மொழியையும் இந்த அரசு அடகு வைத்துள்ளது. எடப் பாடி ஆட்சியில் ஊழல்  இல் லாத துறைகளே இல்லை.

கரேனா காலத்தில்  மாஸ்க் வாங்கியதிலும் கோடிக்கணக் கான ரூபாய் ஊழல் நடந் துள்ளது. சாலை போடுவதி லும், குப்பை அள்ளுவதிலும், நிலக்கரி வாங்கியதிலும் பல் லாயிரம் கோடி  ஊழல் நடந் துள்ளது. படித்த தமிழ் இளை ஞர்கள்  வேலை இல்லாமல் வறுமையில் வாடும்  நிலையில், தமிழக மின்துறையில் வட மாநில இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்  அவ லம் நீடிக்கிறது. திமுக ஆட்சி தான் அடுத்து அமையவுள் ளது. ஆட்சிக்கு  வந்தவுடன் சாயப்பூங்கா, சுத்திகரிப்பு  நிலையம் அமைக்கப்படும்.  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தரமான பொருட்கள் ரேஷன்  கடைகளில் கிடைக்கும். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தொழில் துவங்க  சுழல்நிதி வழங்கப்படும். தமிழ்நாட்டை டில்லியின்  பிடியிருந்து மீட்டு,  சுயமரியாதையோடு ஆட்சி செய்யப்படும். அதற்கு அனை வரும் திமுக வேட்பாளர்களை  ஆதரித்து வாக்களிக்க வேண் டும். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.

Comments