ஜனவரியில் தென்னிந்தியாவில் அதிக வெப்பநிலை பதிவு

புதுடில்லி, பிப். 9- இந்திய வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஜனவரியில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது.

இவற்றில் குறிப்பிடும்படியாக தென்னிந்தியாவில் அதிகம் வெப்பம் பதிவாகி உள்ளது.  கடந்த 121 ஆண்டுகளில் 22.33 டிகிரி செல்சியஸ் என்ற அதிகபட்ச வெப்பநிலை தென்னிந்தியாவில் கடந்த ஜனவரியில் பதிவாகி உள்ளது. கடந்த 1919ஆம் ஆண்டில் இது 22.14 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடந்த 2020ஆம் ஆண்டில் இது 22.93 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது.  மத்திய இந்தியாவில் கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 1982ஆம் ஆண்டுக்கு பின்னர் 14.82 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. கடந்த 1958ஆம் ஆண்டில் 15.06 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என அறிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன

சென்னை, பிப். 9- கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளிகளில் பிற வகுப்பு மாணவர்களும் தொடர்ந்து இணையம் வாயிலாகவே பாடங்களை கற்று வந்தனர். இந்த நிலையில்  11 மாதங்களுக்கு பிறகு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள், ஏற்கெனவே நடத் தப்பட்டு வரும் இணைய வகுப்புகளையே தொடர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Comments