இரண்டே நிமிடங்களில் மருத்துவக் காப்பீடு பெறும் வசதி அறிமுகம்

சென்னை, பிப். 19- பொதுக்காப் பீட்டு நிறுவனமான நவி ஜெனரல் இன்சூரன்ஸ், மொபைல் ஆப் மூலமாக புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள் ளது. இது ‘2 நிமிடஆன்லைன் ரீடெய்ல் மருத்துவக் காப்பீட் டுப் பாலிசி எனக் குறிப்பிடப் படுகிறது. இந்த மருத்துவக் காப்பீட்டுப் பாலிசியை இந் நிறுவனத்தின் நவி ஹெல்த் இன்சூரன்ஸ் ஆப் (Navi Health Insurance App) மூலமாகப் பெற் றுக் கொள்ளலாம். காகிதப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் இந்த வழிமுறை, தற்போது நடைமுறையில் உள்ள விற்பனை வழிகளி லேயே மிக வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தனிநபர் அல்லது குடும்ப உறுப்பினர் கள் இணைந்து - 2 லட்ச ரூபா யில் தொடங்கி, அதிகபட்ச மாக 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான மருத்துவக் காப் பீட்டுப் பாலிசியை எடுக் கலாம். சிகிச்சை தேவைப்படும் பாலிசிதாரர்கள், அதற்கான சேவை வழங்கும் தொலைப் பேசி எண்ணில் தொடர்பு கொண்டு, எந்தவித முன்பண மும் செலுத்தாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு அனுமதி பெற வெறும் 20 நிமிடங்களே போதும். அதோடு, இன்றைய நிலையில் இந்த நவி மருத் துவக் காப்பிட்டுப் பாலிசியின் கீழ் பலன் கோரி வந்த விண்ணப்பங்களில் 98% விண் ணப்பங்களுக்கு காப்பீட்டுப் பலன்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது என இந் நிறுவன மேலாண் இயக்குனர் ராமச்சந்திர பண்டிட் தெரிவித்துள்ளார்.

Comments