கவிஞர் கலி.பூங்குன்றன் தங்கை கணவர் அருள்ஜோதி மறைவு - நமது வீரவணக்கம்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தங்கை கலைச்செல்வி அவர்களது வாழ்விணையர்நண்பர் மா.அருள்ஜோதி அவர்கள் (வயது 72) இன்று (14.2.2021) நாகையில் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகி றோம்.

சிறிது காலம் உடல் நலம் குன்றி, தேறிவந்த அவர், அவரது மகள் வீட்டில் நாகையில் இருந்து வந்தார்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் (NPPC) பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறந்த ஆங்கில எழுத்து வன்மை பெற்றவர். ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' மாத ஏட்டில் பல கட்டுரைகளை எழுதியவர். நம்மிடம் மிகுந்த அன்பு பாராட்டிய பெரியாரிஸ்ட் அவர்.

அவரை இழந்து துயரத்திற்கு ஆளாகியுள்ள கவிஞர் குடும்பத்தவருக்கும், அவரது நேரடி குடும்பத்தவர்களான திருமதி கலைச்செல்வி, இலக்கியத் தேனீ - சீனிவாசன், தனமேநீ-வீரமணி ஆகியோருக்கும், மற்ற குடும்பத் தவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி விக்கிறோம்.

அவருக்கு நமது வீரவணக்கம்.

 

கிவீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14-2-2021

குறிப்பு: சேலம் மாவட்ட சுற்றுப் பயணத்திலிருந்த கவிஞர் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினோம். கவிஞர் ஆத்தூர் நிகழ்ச்சி முடித்து நாகைக்குப் பயணமானார்.

Comments