என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை!

 திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் - பொதுச் செயலாளர் உரை

வடக்குத்து, பிப். 16- கடலூர் மாவட்ட வடக்குத்து கிளை சார்பில் நெய்வேலி ஆர்ச்கேட்அருகில் 13.2.2021 அன்று மாபெரும் பொதுக் கூட்டம் மாவாட்ட தலைவர் தண்டபாணி தலைமையில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் மணிவேல் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தாமோதரன் தொடக்க உரையாற்றினர். கழக பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். ஜிஇடி தேர்வு முடிவை ரத்து செய்ய வேண்டும். நிலம்  வீடு கொடுத்தவர்கள், அய்.டி.அய்அப்ரண்டீஸ் முடித்தவர்க ளுக்கு....பணிக் காலத்தில் இறந்து போன வாரிசுகளுக்கு... வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் தமிழர்களுக்கு முன் னுரிமை கொடுக்க வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். இராமனாதன், ரேவந்த், ஆண்டணி, கண்ணன், எழிலேந்தி, முனியம்மாள், கலைச்செல்வி, இசக்கிமுத்து, பாவேந்தர், தமிழன்பன், தர்மலிங்கம், பெரியார்செல்வம், ராவணன், இந்திரசித் ஆகியோர் பேசினர். இரா.மாணிக்கவேல் பாடினார். தங்க.பாஸ்கர் நன்றி கூறினார்.Comments