பொது நிகழ்வுகளுக்குப்பின் தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது: உள்துறை உத்தரவு

புதுடில்லி. பிப்.18 பொது நிகழ்வுகளுக்குப்பின் தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது என்றும், தேசியக்கொடிக்கு உரிய மரியா தையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில்,  முக்கியமான தேசிய, கலாச்சார, விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக்கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு உள்ளது. அந்த நிகழ்வு களுக்குப்பின் இந்த கொடிகளை தரையில் வீசிவிட்டு செல்லக்கூடாது.

மேலும், பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் முன்னிலையில் தேசியக்கொடியை எரித்தல், சிதைத்தல், அழித்தல் போன்ற அவமதிப்பு செய்வோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இதைப்போல தேசியகீதம் பாடுவதை ஒருவர் வேண்டுமென்றே தடுத்தால் அல்லது இடையூறு ஏற்படுத்தினால் 3 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் ஏன்று கூறப்பட்டுள்ளது.

இது போன்ற விதிகள் முதலில் இருந்தே இருக்கிறது,தேசிய கீதம் இசைக்கும் போது நிற்காமல் நடந்து சென்றவரும் யோகா நிகழ்ச்சியின் போது கொடியை எடுத்து முகம் கழுத்தில் உள்ள வியர்வையைத் துடைத்தவருமான மோடிக்கும், குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை இறக்கி விட்டு அக்கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றிய ராஜஸ்தான் பாஜக பிரமுகர்களுக்கு என்ன தண்டனை தரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

Comments