மாவட்டம் முழுவதும் இளைஞரணி சார்பில் கிராமப்பிரச்சாரம் நடத்த தீர்மானம்

ஈரோடு கலந்துரையாடலில் முடிவு

ஈரோடு, பிப் 6- 3.02.2021 புதன் காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு பெரியார் மன்றத்தில் மண்டல தலைவர் .பிரகலா தன் தலைமையில், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட் டச் செயலாளர் மா.மணிமா றன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

இரங்கல் தீர்மானம்

1. ஈரோடு பெரியார் படிப் பக வாசகர் வட்ட புரவலரும் சீரிய பகுத்தறிவாளருமாகிய பி.என்.எம்  நடேசன் அவர் களது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது தொண் டிற்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டது.

2. தலைமைக் கழகத்திடம் அனுமதி பெற்று ஈரோடு மாவட்டத்தில் விரைவில் மாவட்ட இளைஞரணி சார் பாக கிராமப் பிரச்சாரம் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இரு நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

3. ஈரோடு ஒன்றியத்திற்கு செ.பிரகாசன் (பொதுக்குழு உறுப்பினர்) பெருந்துறை ஒன்றியத்திற்கு மா.மணிமா றன் (மாவட்டக் கழகச் செய லாளர்) மொடக்குறிச்சி ஒன் றியத்திற்கு தே.காமராஜ் (மாநில இளைஞரணி துணைச் செய லாளர்) பவானி ஒன்றியத் திற்கு - .பிரகலாதன் (மண் டல தலைவர்) சென்னிமலை ஒன்றியத்திற்கு - ஜெபராஜ் செல்லத்துரை (மண்டல இளைஞரணி செயலாளர்) கொடுமுடி ஒன்றியத்திற்கு- சிவகிரி கு.சண்முகம் (மாவட்ட அமைப்பாளர்) ஆகியோர் பொறுப்பாளர்களாக இருந்து கிராமப் பிரச்சா ரத்தை நடத்துவார்கள் என் றும் மாவட்டத் தலைவர் கு. சிற்றரசு ஒருங்கிணைப்பாள ராக செயல்படுவார் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளர்ஈரோடு .சண் முகம். பேராசிரியர் .காளி முத்து, பொதுக்குழு உறுப் பினர் கோ.பாலகிருட்டிணன், கோ.திருநாவுக்கரசு, மாநில இளைஞரணி துணை செய லாளர் தே.காமராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்ச்செல்வன், மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை, பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் பி.என் எம்.பெரியசாமி, திராவிடர் பேரவை நிறுவனத் தலைவர் பா.மாசிலாமணி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments