போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது தேசத்துரோகம் என்றால் நான் சிறையிலேயே இருந்துகொள்கிறேன் : சமூக ஆர்வலர் திஷாரவி

 

புதுடில்லி,பிப். 22 தலைநகர் டில்லியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட் டத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டது தேசத்துரோகம் என்றால் நான் சிறையிலேயே இருந்து கொள் கிறேன் என்று திஷாரவி கூறியுள் ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதி ராக விவசாயிகளின் போராட்டம் 88 ஆவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதர வாக சுவீடனை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தனது இணையத்தில் பதிவேற்றிய கருத் துக்கள் உலகளவில் மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்த கருத்தை லட்சக்கணக்கானோர் ஆதரித்ததை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்தாயுதமாக மாறியது. இந்நிலையில், கிரேட்டா தன்பர்க்-குக்கு உதவியதாகக் கூறி,  பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திஷா ரவியை டில்லி காவல்துறை கைது செய்தனர்.

திஷா ரவியை விடுதலை செய் யக்கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்த நிலையில், அரசு சார்பில் அவருக்கு எதிராக வழக்கு போடப்பட்டது. வழக்கில் இருந்து விடுவிக்கவும், தனக்குப் பிணை வழங்கவும் திஷா ரவி போராடி வரும் நிலையில், திஷாரவி தேச விரோத நட வடிக்கையில் இறங்கி இருப் பதால் அவருக்கு பிணை வழங்கக்கூடாது" என்று அரசு தரப்பில் வாதிடப் பட்டது. இதற்கு தனது வழக் குரைஞர் மூலம் பதிலளித்த திஷா, விவசாயிகளின் போராட்டத்தை உலகிற்கு தெரியும்படி எடுத்துக் கூறியது தேச துரோகக் குற்றம் என்று கூறினால் அதற்காக நான் சிறையில் இருக்கவே விரும்புகிறேன்'' என்று கூறினார். பிணை தொடர்பான இந்த வழக்கில் வரும் திங்களன்று (23 பிப்ரவரி) தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Comments