மகாராட்டிராவில் உணவு அமைச்சர் சகன் புஜ்பாலுக்கு கரோனா தொற்று

மும்பை, பிப். 24  மகாராட்டிராவில் உணவுத்துறை அமைச்சர் சகன்புஜ்பாலுக்கு  கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தை சேர்ந்த உணவு, பொதுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சரான சகன் புஜ்பாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளதாவது:

கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டுகிறேன். என் உடல்நலம் தற்போது நன் றாக உள்ளது. கவலைப்படத் தேவையில்லை என்று கூறி யுள்ளார். அதிக கரோனா பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாநிலமாக மகாராட்டிரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments