தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற"திராவிடம் வெல்லும்" தெருமுனை கூட்டம்

தஞ்சை, பிப். 26- தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் 24-2-2021 புதன் மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா எதிரில் "திராவிடம் வெல்லும்" என்னும் முழுக் கத்துடன் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது

தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .விஜயகுமார் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந் திரன் தலைமை வகித்து உரையாற் றினார்

மாநகர அமைப்பாளர் செ.தமிழ் செல்வன், தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர் இரா.சேகர், வடக்கு ஒன் றியச் செயலாளர் கா.அரங்கராசன், மாநகர துணைச்செயலாளர் பழக் கடை கணேசன் ஆகியோர் முன் னிலையேற்றனர்

மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, மாவட்டச் செயலா ளர் .அருணகிரி, கழகப் பேச்சாளர் பூவை.புலிகேசி, கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டத் தலை வர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தொடக்கவுரையாற்றினார்.

இறுதியாக கழக கிராம பிரசசாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் நடைபெற வுள்ள சட்டமன்ற தேர்தலில் நமது உரிமைகளை பாதுகாத்திட தி.மு. தலைமையிலான கூட்டணிக்கு வாக் களிக்க வேண்டியதின் காரணங்களை எடுத்து வைத்து சிறப்புரையாற்றினார். கரந்தை பகுதி செயலாளர் டேவிட் நன்றி கூறினார்

மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், மாவட்ட தொழி லாளரணி அமைப்பாளர் ஆட்டோ ஏகாம்பரம், மாநகர இளைஞரணி தலைவர் மதன்ராஜ், வெ.ரவிக்குமார், அம்மாப்பேட்டை ஒன்றிய பகுத்தறி வாளர் கழக செயலாளர் பெரியார் கண்ணன், .பெரியார் செல்வன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இரா.கபிலன், களிமேடு அரிகரன் உள்ளிட்ட கழகத்தோழர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments