புதுடில்லி. பிப். 13- காஷ்மீரில் மீண்டும் கருப்பு பனி (உறை பனி) பெய்யும்போது பாஜக வில் சேருகிறேன் என பிரதமர் மோடியின் அழைப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், ஓய்வுபெற்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் பதில் தெரிவித்துள்ளார்.
மோடியின் பாராட்டு குறித்து அவர் பேசியதாவது, “இந்தியாவில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுக்கு செல்லாத நல்வாய்ப்புப் பெற்ற மக்களில் நானும் ஒரு வன். பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் குறித்து கேள்விப் படும் போது, நான் இந்திய முஸ்லீம் என்பதனை நினைத்து பெருமை கொள்வேன்” என்றார்.
இந்த நிலையில், ஆசாத் துக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பு சலசலப்பை ஏற் படுத்தியது. ஊடகங்கள், குலாம்நபி ஆசாத் பாஜகவில் சேரலாம் என்று ஊகங்களை வெளியிட்டு வந்தன. அது போல, ஒரு ‘இந்துஸ்தானி முஸ்லீம்’ மற்றும் ‘குழு 23’ போன்றவைகளும் இது குறித்து விமர்சித்திருந்தன.
இந்த நிலையில், தான் ஒரு போதும் பாஜகவில் இணைய மாட்டேன் என்று தெரிவித்துள்ளதுடன், காஷ்மீரில் மீண்டும் கருப்பு பனி (உறை பனி) பெய்யும் வகையில் காலம் மாறட்டும், அப்போது பாஜகவில் சேருகிறேன் என பதில் தெரிவித்துள்ளார் குலாம் நபி ஆசாத்.
ஆனால், எங்களின் நட்பு ஜம்மு-காஷ்மீரின் பிரச்சினை களை பாதிக்காது என்று நினைக்கிறேன். பாஜக அரசு மீது, 370ஆவது பிரிவு பற்றி மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த மக்களும் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர். பாஜகவின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இல்லாத யூனியன் பிரதேசத்திற்கு, மாநிலத்தைப் பிரித்துள்ளது, தகுதியை ரத்து செய்துள்ளது, அனை வரையும் காயப்படுத்தியுள் ளது; இந்த நடவடிக்கையால் நாங்கள் சாம்பலாகிவிட்டோம்.
யூனியன் பிரதேசங்களை மாநிலங்களாக மேம்படுத்து வதை மட்டுமே நான் கண் டேன், நாட்டின் மிகப் பெரிய மற்றும் பழைமையான மாநி லங்களில் ஒன்றான எனது சொந்த மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள் ளது, அதை ஒருபோதும் ஜீர ணிக்க முடியாது. எந்த அடிப் படையில், அவ்வாறு செய்யப் பட்டது என்பது எனக்குத் தெரியாது. பெரும்பாலானவர் களுக்கு அதன் பின்னணி தெரியாது. என்றார்.