அரசு அலுவலக வளாகத்தில் கோயில் கட்டுவதா?

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அரசாணை விதிகளுக்கு முரணாக முதன்மைக்கல்வி அலுவலர் முயற்சியில்  குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மண்டல கழகத் தலைவர் பெ.இராவணன், நகரத் தலைவர் ரெ.மு.தர்மராசு, செயலாளர் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் ராசேந்திரன் உள்ளிட்டோர் 23-2-2021 அன்று அரசாணைகளைச் சுட்டிக்காட்டி மேற்கண்ட பணிகளை உடனடியாக நிறுத்தி கட்டுமானங்களை அப்புறப்படுத்தக் கோரி முதன்மைக்கல்வி அலுவலக உதவியாளரிடம் கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளனர்.

Comments