இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம்

18.2.2021 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் அரசியல் தீர்மானத்தை, கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் கே. சுப்பராயன் எம்.பி. முன்மொழிந்தார்.

அத்தீர்மான அம்சங்கள் வருமாறு:

(1) இந்தியப் பொருளாதார சமூக திசை வழி நாட்டை அபாயகரமான எல்லைக்கு இழுத்துச் செல்லுகிறது.

(2) நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை சிதைக்கப்பட்டு  ஒற்றை மனித எதேச்சதிகார ஆட்சி முறை என்ற பலிபீடத்திற்கு நாடு தள்ளப்படுகிறது.

(3) ஆட்சியின் தவறான வழிமுறைகள், செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள்அர்பன் நக்சலைட்டுகள்' 'நாட்டின் விரோ திகள்' என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். அவர்கள்மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

(4) உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்ற திரிசூலம் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்கள் காக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

(5) உள்நாட்டு சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஒழித்து விட்டு இந்திய சந்தை முற்றாக அந்நியப் பொருள்களுக்குத் தாரை வார்க்கப்படுகிறது.

(6) இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைத்தல்.

(7) இவற்றின் பின்புலத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் எதிர் நோக்கப்பட வேண்டும்.

(8) தமிழ்நாட்டின் தனித்துவமான பகுத்தறிவு, அறிவியல் சிந்தனை, மத நல்லிணக்கம், சமூகநீதி இவற்றின் அடிப்படையில் இந்தியாவில் முன் வரிசையில் நிற்கும் மாநிலம் தமிழ்நாடு. இவை பா...வின் இந்துத்துவா கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

(9) தமிழ்நாட்டில் .தி.மு..வை வசப்படுத்தி தன் கொள்கைகளை பா... அரசு திணிக்க முயற்சிக்கிறது.

(10) தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு விழும் வாக்குகளை சிதறடிக்கும் வஞ்சக அரசியல் சதிகளை பா... மேற்கொண்டு வருகிறது.

(11) இந்த நிலையில் வரும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டினை அதன் தனித்தன்மையோடு மீட்டெடுப்பது - வளமார்ந்த தமிழகத்தை உருவாக்குவது - ஆற்றல் வாய்ந்த திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தருமாறு தமிழ் நாட்டு மக்களைக் கோரும் தீர்மானமாக அரசியல் தீர்மானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்தியில் உள்ள பா... அரசு இந்தியா பல மாநிலங்க ளையும், பல மொழிகளையும் - பல பண்பாடுகளையும் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்பதை நிராகரிக்கிறது.

மாநிலங்களே கூடாது - இந்தியாவின் ஆட்சி மொழிக்குத் தீர்வு சமஸ்கிருதமே என்பதுதான் - ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் தனது ஞான கங்கையில் (Bunch of Thoughts) குறிப்பிட்டுள்ளதற்கு வடிவம் அமைக் கவே  பா... - சங்பரிவார் ஆட்சி அதிகாரத்தை அனாயச மாகப் பயன்படுத்தி வருகிறது.

தேசிய கல்விக் கொள்கை என்பது குலத் தொழிலை முன்னிறுத்துகிறது. இந்தி, சமஸ்கிருதத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்கிற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அணுகுமுறைக்கு வேட்டு வைத்து பொருளாதார அளவுகோலைத் திணித்தது.

புதிய கல்விக் கொள்கை ஆவணத்தில் சமூகநீதி, இட ஒதுக்கீடு என்ற சொற்கள் தப்பித் தவறிக் கூட இடம் பெற வில்லை.  Socio - Economically Disadvantaged Group என்ற புதிய சொல்லாடல்கள் சூழ்ச்சியோடு இடம் பெறச் செய்யப் பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களை தனியார் வசம் ஆக்குவதில் கட்டுக் கடங்காத ஆர்வத்தோடு செயல்கள் அமைந்துள்ளன. தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு இல்லை என்பதை நினைவில் கொண்டால், இதன் வேரில் இருக்கும் விஷ ஊற்று எத்தகையது என்பது சொல்லாமலே விளங்கும்.

மத்திய அரசின் இந்தப் பிற்போக்கு பாசிச நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அஇஅதிமுக அரசு முற்றி லும் சரணாகதி அடைந்து விட்டது.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அண்ணா வின் தத்துவத்தை - அண்ணா பெயரில் உள்ள அதிமுக அரசு முற்றிலும் பா...வுக்கு அடகு வைத்து விட்டது.

அதிமுக முதுகில் சவாரி செய்து அதிமுகவை ஒழித்து விட்டு அந்த இடத்தை பா... பிடிப்பது என்ற கெட்ட நோக்கத்தைப் புரிந்து கொள்ள ...தி.மு.. தவறும் நிலையில்  தனது தற்கொலைக்குத் தானே கயிற்றையும் கம்பத்தையும் தயாரித்துக் கொண்டு விட்டது என்று பொருள்.

இந்த நிலையில் மதுரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு அரசியல் தீர்மானம், வழிகாட்டும் அரிய தீர்மான மாகும். மக்கள் மத்தியில் இதனைக் கொண்டு சேர்க்க வேண் டியது அவசியமாகும். எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிப்பு வரலாம். உஷார்! உஷார்!! உஷார்!!!

Comments