செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் இந்தியப் பெண்ணுக்கு குவியும் பாராட்டு

வாசிங்டன், பிப்.20 செவ்வாய் கிர கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் விண்கலத் தின் பய ணத்திற்கு இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் சுவாதி மோகன் முக்கிய பங்காற்றியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர் சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ் வாய் கிரகத்தில் நேற்று (19.2.2021) தரையிறங்கியது.

இந்த திட்டத்தில் இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது. செவ்வாய் கிரகத் துக்கு ஆய்வு வாகனத்தை அனுப்பும் இந்த திட்டம், 2013இல் துவங்கியதில் இருந்தே அதில் ஈடுபட்டு வந்தார் சுவாதி.

ஜி.என். அண்ட் சி எனப்படும் வழி காட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப் படுத்துதல் பிரிவின் தலைவராக இருந் தார். ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல் லாம் செயல்பட வேண்டும் என்ப தற்கான தொழில்நுட்பத்தை உருவாக் கினார் சுவாதி மோகன். மேலும் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய போது அதன் ஒவ்வொரு செயல்பாடு களையும் கண்காணித்து வந்தார்.

கருநாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி மோகன் தன் ஒரு வயதிலே அமெரிக்கவுக்கு சென்றார், குழந்தைகள் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். ஸ்டார் டிரெக் நிகழ்ச்சியை பார்த்து விண்வெளி ஆய்வில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு களுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற் றுள்ளார். நாசாவின், சனி கிரகத் துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட் டுள்ளார்.

Comments