பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு: வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தை கைவிட வேண்டும் : தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, பிப். 16 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், அரசு வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தை கைவிட வேண்டும் என்றும் தி.மு.. தலைவர் தளபதி  மு..ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

அவர் நேற்று (15.2.2021) விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, சட்டப் பேரவை தேர்தலைக் கருத்தில் வைத்து, பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மதுரைஎய்ம்ஸ்மருத்துவமனையின் நிலை என்ன வென்று அறிந்த தமிழக மக்கள், பிரதமரின் புதிய அறிவிப்புகளின் தன்மையையும் தரத்தையும் நன்கு அறிவார்கள். அவர் வாயால் அறிவிக் கப்படாதபரிசாகசமையல் எரிவாயு உருளையின் விலை மீண்டும் உயர்த் தப்பட்டி ருக்கிறது.

பொதுமக்கள் பயன்படுத்தும் மானியத்துடனான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கரோனா காலத் தில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை உயர்த்தி, வதை படு படலத்தைத் தொடங்கிய பா... தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தற்போது மானியமில்லாத சிலிண்டர் விலையையும் ரூ.50 உயர்த்தி தேநீர்க்கடை, சிறு உணவகம் போன்ற எளிய மக்களின் வணிகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த விலை உயர்வுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

செஞ்சுரிஅடிக்கப்போகும் பெட்ரோல் விலை

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பன்னாட்டு சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் விற்பனையான போது, ரூ.450 முதல் ரூ.500-க்குள்ளான விலையில் சமையல் எரிவாயு உருளை விற்கப்பட்டது. அதற்கே பா... வினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.

ஆனால், பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், அதை வேண்டுமென்றே கணக்கில் கொள்ளாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா... அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. தற்போது 750 ரூபாய்க்கும் அதிகமாகச் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விலை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு மக்களைத் தள்ளியுள்ளது பா... அரசு. பெட்ரோல் விலைசெஞ்சுரிஅடிக்கப்போகிறது. டீசல் விலை அதனைப் பின் தொடர்கிறது. சமையல் எரிவாயு விலை விண்ணைத் தொடுகிறது.

வரிவிதிப்புகளைக் குறைத்து

இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு இத்தகைய பரிசுகள் தேவையில்லை. அவர்கள் நிம்மதியாக வாழும் வகை யில், வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வலி யுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments