ஆத்தூரில் எழுச்சியுடன் நடைபெற்ற "திராவிடம் வெல்லும்" சிறப்புக் கூட்டம்: கழகத்துணைத் தலைவர் சிறப்புரை

ஆத்தூரில் "திராவிடம் வெல்லும்" சிறப்புக் கூட்டம் 14.2.2021 அன்று காலை 10 மணிக்கு  நடைபெற்றது. கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இன்றைய நிலையில் மத்திய பா.. அரசின் சமூக நீதி பறிப்பும் தமிழக அரசின் மவுனமாக உள்ள நிலையும் பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறினார். நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து கட்சித் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மன்னார்குடி கழக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கோவில்வெண்ணி ரவிச்சந்திரன்-பிரியதர்சினி மணவிழா 14-2-2021 அன்று காலை 11 மணியளவில் புன்னகை மகாலில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலியில் வாழ்த்துரையாற்றினார். மணவிழாவினை நடத்தி வைத்த கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் இரண்டு திராவிடப் பொழில் சந்தாதொகை ரூ.1600அய் மணமக்கள் வழங்கினார்கள்.


Comments