பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

புதுவை, பிப் 25 புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை கண்டித்து மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் அண்ணாசிலை அருகே நேற்று (24.2.2021) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் முத லமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மத்தியில் ஆளும் மதவாத பா... அரசு புதுவை மாநிலத்தை அவமதித்ததைக் கண்டிக்கிறோம். நாடு முழுவதிலும் பல்வேறு தலைவர்கள் நமக்கு ஆதரவு தெரி வித்துள்ளனர். புதுவையில் மட்டுமல்லாது பல மாநிலங்களில் பா... ஜனநாயக படுகொலை செய்துள்ளது. மணிப்பூர், அருணாசலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் குதிரை பேரம் நடத்தி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பு செய்தனர். கருநாடகாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் பேரம் பேசி ஆட்சி மாற்றம் செய்தனர்.

புதுவை மாநிலத்தில் 5 ஆண்டுகளை நாம் நிறைவு செய்துவிட்டோம். தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் மானங்கெட்ட செயலை என்.ஆர்.காங்கிரஸ், .தி.மு.., பா...வினர் செய்துள்ளனர். பணபலம், அதிகார பலத்தை பயன் படுத்தியும், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில துரோகிகளைப் பயன்படுத்தியும் ஆட்சியை கவிழ்த்தனர். ஆனால், புதிதாக அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. சட்டமன்ற நியமன உறுப்பினர்கள் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் வாக்களிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 18 இடங்களில் பா... போட்டியிட்டது. அதில் எத்தனை இடங்களில் டெபாசிட் பெற்றது. பா...வுடன் சேருபவர்களும் இந்தத் தேர்தலோடு காணாமல் போவார்கள். டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கவிழ்த்துள்ளனர். அரியானாவில் சவுத லாவின் பேரன் 10 சட்டமன்ற உறுப்பி னர்களைப் பெற்றார். அவருடன் கூட்டணி அமைத்த பா... பின்னர் அவருடன் இருந்த 9 சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசப்படுத்தினர். அதேநிலைதான் நாளைக்கு ரங்கசாமிக்கும் ஏற்படும்.

இவ்வாறு  முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Comments