மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அருமை சகோதரர், திராவிட இயக்கப் போர்வாள் மானமிகு வைகோ அவர்களது மூத்த சகோதரி திருமதி எஸ். ராஜலட்சுமி (வயது 88) அவர்கள் நேற்று (22.2.2021) இயற்கை யெய்தினார் என்பதை அறிந்து மிகவும் வேதனையும், வருத்தமும் அடைகிறோம்.
அவரது மறைவால் வாடும் அருமை சகோதரர் வைகோ மற்றும் அவரது குடும்பத்தினர் - உறவுகள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்று பகல் செய்தி அறிந்தவுடன் வைகோ அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23-2-2021