டில்லி குடியரசு நாள் சதி-வன்முறைகள்: நீதி விசாரணை கோரும் விவசாய அமைப்புகள்

புதுடில்லி, பிப்.16- குடியரசு நாளன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த சம்பவங்கள் அதன் பின்ன ணியில் உள்ள சதி மற்றும் விவசாயிகள்மீது பதிவு செய்யப்பட்ட போலி வழக்கு கள் குறித்து உயர்மட்ட நீதி விசா ரணை நடத்த விவசாயிகள் அமைப் புகள் கோரியுள்ளன. வேலை நிறுத் தம் தொடங்கியதில் இருந்து இது வரை 233 விவசாயிகள் இறந்துள்ளனர். இவர்களில் 13 பேர் தற்கொலை  செய்து கொண்டவர்களாவர்

இதுகுறித்து விவசாயிகளின் போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் கூட்டமைப்பான கிசான் மோர்ச்சா சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கை வருமாறு:

உச்ச, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரிக்கை!

குடியரசு நாளன்று விவசாயிகள் நடத்திய அணிவகுப்பின் போது நடந்த சம்பவங்கள், அதன் பின்னணி யில் உள்ள சதி மற்றும் விவசாயிகள்மீது பதிவு செய்யப்பட்ட போலி வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. டில்லி அணிவகுப்பில் பங்கேற்ற 112 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். பதிவு செய்யப் பட்ட 44 வழக்குகளில் 14 வழக்குகளில் இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிசான் மோர்ச்சா சட்ட உதவி குழு 13.2.2021 அன்று சிறைகளுக்குச் சென்ற விவசாயிகளை சந்தித்தது. அப்போது அவர் களிடம் சட்ட உதவிக் குழுவினர் விசாரணை நடத்தினர்.

குடியரசு நாள் நிகழ்வுகளுக்குப் பிறகு பதினாறு விவசாயிகளை இன் னும் காண வில்லை. அரியானாவில் ஒன்பது விவசாயிகளும், ராஜஸ்தா னில் ஒருவரும், பஞ்சாபில் ஆறு விவசாயிகளும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. கைது செய் யப்பட்ட விவசாயிகள் அனைவரை யும் ஒரே சிறைக்கு மாற்ற வேண்டும். இந்த கோரிக்கையுடன் கிசான் மோர்ச்சா தலைவர்கள் டில்லி அமைச்சர் ராகவ் சத்தலாவை சந்தித் தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு அனைத்து சட்ட உதவிகளும் வழங்கப்படும். சிறை உண வகத்தில் பயன்படுத்த ஒவ்வொரு விவசாயியின் கணக்கிலும் இரண்டாயிரம் ரூபாய் வைப்பு செய்யப்படும். டில்லி காவல்துறையினரிட மிருந்து தாக்கீது பெறும் விவசாயிகள் நேரில் ஆஜரா கக்கூடாது என்றும் சட்ட உதவி குழுவை தொடர்பு கொள்ள வேண் டும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர்.

233 விவசாயிகள் இறந்துள்ளனர்

டில்லி எல்லையான சிங்குவில் 70 நாள் களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட் டிருந்த ஹன்சா சிஜு மற்றும் நைப் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். பஞ்சாபில் உள்ள தாராவைச் சேர்ந்த நாயப் சிங், வெள்ளியன்று (12.2.2021) போராட்டத்தில் இருந்து வீடு திரும் பியிருந்தார். சனியன்று அவர் இறந் தார்.

72 வயதான ஹன்சா சிஜு போராட்ட மய்யத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார், இவர் பஞ்சாபின் தரம் கோட்டைச் சேர்ந்த வர். வேலை நிறுத்தம் தொடங்கியதில் இருந்து இதுவரை 233 விவசாயிகள் இறந் துள்ளனர். இவர்களில் 13 பேர் தற்கொலை  செய்துகொண்டவர் களாவர்.

புல்வாமாவில் உயிரிழந்த படையினரின் தியாகத்தின் ஆண்டுவிழா வான ஞாயிறன்று, விவசாயிகள் நாடு தழுவியடார்ச்லைட்' ஊர்வலங்கள் மற்றும் மெழுகுவத்தி ஏந்தி அணி வகுப்புகளை நடத்தினார்கள். உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரி யாதை செலுத்தும் நிகழ்வு நாடு தழு விய அளவில் நடைபெற்றது.

Comments