கொழுமம் சமத்துவபுரத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு கனிமொழி எம்.பி மாலை அணிவித்து மரியாதை

திருப்பூர்,பிப்.11- திருப்பூர் மாவட்ட பகுதிகளில் 10,11,12  ஆகிய தேதிகளில் தொடர்ந்து  தேர்தல் பரப்புரை மேற் கொள்ளும் திமுக மகளிரணி செயலா ளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான மு. கனிமொழி நேற்று (10.2.2021) காலை மடத்துக்குளம் வட்டம் கொழுமம் சமத்துவபுரத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.மடத்துக்குளம் தொகுதி  சட்டமன்ற உறுப்பினரும்,திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வழக்குரைஞர் இரா.ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்ட திருப்பூர் தெற்கு மாவட்ட  திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments