பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப்படிப்பு (D.Pharm.) மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு  பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறையின் மூலம் 11.02.2021 அன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர்மெட் மருந்தியல் நிறுவனம் (SUPERMED Pharmacy) கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தது. கலந்து கொண்ட 30 மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை பணிநியமன ஆணையை வழங்கி சிறப்பித்தார். மீதமுள்ள 18 மாணவர்கள் தங்களது  உயர்கல்வியினை தொடராத பட்சத்தில் சூப்பர்மெட் மருந்தியல் நிறுவனத்தில் பணியினை தொடர எந்நேரமும் அணுகலாம் என்பதனை அந்நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொண்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரியார் மருந்தியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. . ராஜேஷ் மற்றும் குழுவினர்  சிறப்பாக செய்திருந்தனர்.

Comments