பா.ஜ.க. ஆட்சியில் மக்களால் நிம்மதியாக வாழமுடியவில்லை கருநாடக காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

பெங்களூரு,பிப்.22 பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருநாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பாஜக ஆட்சியில் மக்களால் நிம்மதியாக வாழமுடியாமல் நாள்தோறும் துன்பத்தில் உழன்று வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

கருநாடக மாநில செயல் தலைவராக முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி நியமிக்கப்பட் டுள்ளார். அவர், செயல் தலைவராக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி பெங் களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கருநாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக் குமார், டில்லி மக்களவை எதிர்க் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு செயல் தலைவராக பொறுப்பு ஏற்று கொண்ட ராமலிங்க ரெட் டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் யாரும் நிம்மதியாக வாழ முடியவில்லை. மக்கள் நிம்மதியை இழந்து தங்களது வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு பா.ஜனதா ஆட்சியால் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள், பெண்கள், தாழ்த்தப் பட்டோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நிம்மதி இன்றி வாழ்கிறார்கள். பாஜக அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு தவறி விட்டது. அரசியலிலும், வாழ்க்கையிலும் தாமாக எதுவும் கிடைத்து விடாது என்று இந்திரா காந்தி கூறி இருக்கிறார்.

ஆனால் தற்போது நாம் எதையும் தேடி போக வேண்டிய நிலை இல்லை. மத்தியிலும் மாநிலத் திலும் உள்ள பாஜக  அரசு மக்க ளுக்காக எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை, மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறார்கள். அத னால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை அமைக்க விரும்பி காங் கிரஸ் கட்சி செல்ல வேண்டிய அவ சியமில்லை. பாஜகவினரே நமது வீடு தேடி ஆட்சியை விட்டு கொடுத்துவிட்டு செல்வார்கள், என்று தனது உரையில் அவர் பேசினார்.

Comments