சமையல் எரிவாயு மானியத்திலும் மக்களை ஏமாற்றும் மோடி அரசு

2020 மே மாதத்தில் 1 ரூபாய் கூட வழங்காத மத்திய அரசு

 புதுடில்லி, பிப். 14- நீண்ட காலமாக மக்களின் பயன் பாட்டில் இருக்கும் முக்கிய எரிபொருள் மண்ணெண் ணெய் ஆகும். ஆனால், மண்ணெண்ணெய்க்குப் பதில் எரிவாயு பயன்பாட்டை மத்திய அரசாங்கம் ஊக்கப் படுத்தியது. இதனால் மக்க ளும் பெருமளவில் எரிவாயு பயன்பாட்டுக்கு மாறினர். இன்று நாடு முழுவதும் 28 கோடியே 90 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு கணக்கு தெரி விக்கிறது.

2021-22 பட்ஜெட்டில் மண்ணெண்ணெய்க்கு வழங்கிவந்த மானியத்தை முழுமையாகவே மோடி அரசு நிறுத்தி விட்டது. 2019-20 நிதியாண்டில் மண்ணெண் ணெய்க்கான மொத்த மானி யச் செலவு ரூ. 4 ஆயிரத்து 58 கோடியாக இருந்தது. அது நடப்பு 2020-21 நிதியாண்டில் ரூ. 2 ஆயிரத்து 677 கோடியே 32 லட்சமாக குறைக்கப்பட்டு- 2021-22 நிதியாண்டிற்கு ஒதுக் கீடே இல்லை என்று நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. 2016-இல் துவங்கி, ஒவ்வொரு 15 வாரங்களுக்கு ஒருமுறை மானிய மண்ணெண்ணெய் விலையில் 25 காசுகள் உயர்த்தி, ரேசன் மண் ணெண் ணெய் விலையையும், வெளிச் சந்தையில் விற்கப்படும் மண் ணெண்ணெய் விலையையும் மோடி அரசு ஒன்றாக்கிவிட் டது.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமாக மட்டும் சுமார் 7 கோடி இணைப்புக்கள் வழங் கியிருக்கிறோம் என்று வெளியே பெருமை பீற்றி வருகிறது.

இதில் இன்னொரு துயரத் தையும் மக்கள் மீது மோடி அரசு அரங்கேற்றி வருகிறது. அது என்னவெனில், எரிவாயு வுக்கான மானியத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்து வதாகும்.எரிவாயு மானியத் தொகையைப் பெறுவதற்கா கவே பலரும் வங்கிக் கணக்கு ஆரம்பித்தனர். மாதம் 500 ரூபாய்கூட சேமிப்புக் கணக் கில் வைத்திருக்க முடியாத வர்கள், எரிவாயு மானியத் திற்காக கணக்கு ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். மாதந் தோறும் வரும் மானியத் தொகையானது, இவர்களது வங்கிக் கணக்கின் குறைந்த பட்ச இருப்புக்கு ஒரு உத்தர வாதத்தை அளித்து வந்தது. ஆனால், தற்போது 25 ரூபாய், 30 ரூபாய் என்ற அளவில் மட்டுமே வரும் மானியத்தால், பலரின் வங்கிக் கணக்குகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க முடி யாமலும், வந்துவிழும் 50 ரூபாய் மானியத்தை அபராத மாக பறிகொடுத்துக் கொண் டிருப்பதும் முக்கியமான அவலமாக மாறியிருக்கிறது. அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை அரசாங்கமே மானியமாக பறித்துக் கொள் கிறது. ஜீரோ பேலன்சில் ஆரம்பிக்கப்பட்ட ஜன்தன் கணக்குகள் மட்டுமே இதில் தப்பிக்கின்றன.இந்நிலையில்தான் பட்ஜெட்டில், பெட்ரோல் - டீசல் மீதான வரிகளை உயர்த்திய மோடி அரசு, எரிவாயு சிலிண்டர் விலையிலும் 25 ரூபாயை உயர்த்தி, மேலும் மேலும் கொள்ளையை தீவிரப்படுத்தி யுள்ளது.

Comments