நூல் அரங்கம்

நூல் விமர்சனம் : சிங்காரவேலரும் பாரதிதாசனும்

ஆசிரியர்: புலவர் பா.வீரமணி

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

பதிப்பு: டிசம்பர் 2020 விலை: 160/-

புலவர் பா.வீரமணி அவர்கள் எழுதி யுள்ளசிங்கார வேலரும் பாரதிதாசனும்என்ற நூல் ஓர் உலக அளவில் சிந்தனை உலகின் சிகரத்தை தொட்ட பொதுவுட மைவாதியும், கவிதை உலகின் சிகரத்தைத் தொட்ட புரட்சிக்கவிஞர் அவர்களும் ஒரே நேர்க்கோட்டில் சிந்தித்த சிந்தனை களை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பொதுவுடமை சிந்தனைகளை தனது கவிதைகளில் எவ்வாறு வெளிப் படுத்தினார் என்பதையும், பொதுவுடைமை இயக்க முன்னோடியான சிந்தனை சிற்பி .சிங்காரவேலர் அவர்கள் பெரியாரோடு இணைந்து சுயமரியாதை இயக்க கருத்து களையும் எவ்வாறு உள் வாங்கி செயல்பட் டார் என்பதையும் ஆராய்ந்து விளக்குகிறது

இந்த நூல் சிங்காரவேலர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரோடு இணைந்து, சுயமரியாதை  இயக்கத்தில் செயல்பட்டவர் என்பதைப் பெரும்பாலோர் அறிவர். அக்காலத்தில் 1931 முதல் 1935வரை அவர் குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி ஆகிய இதழ்களிலும், பின்னர் 1935 முதல் 1937 வரை புது உலகம் எனும் மாத இதழிலும் எழுதிய கட்டுரைகள், புரட்சிக் கவிஞருக் குச் சிந்தனை விருந்தாகவும், புது விளக்க மாகவும் இருந்துள்ளன. சுயமரியாதை இயக்கத்தில் புரட்சிக் கவிஞரும் இணைந்து செயல்பட்டவர். அவரும் மேற் கண்ட இதழ்களில் கவிதைகளையும் கட்டு ரைகளையும் படைத்துள்ளார். சிங்கார வேலரின் கட்டுரைகள், மூடநம்பிக்கை ஒழிப்பு, மத ஒழிப்பு, பகுத்தறிவு, தன்மா னம் போன்றவை குறித்து மட்டு மல்லாமல், பொதுவுடைமை, உயிரியல், உடலியல், உளவியல், பொருளியல், வானியல், மானி டவியல் போன்ற துறைகளைக் குறித்து எல்லாம் வெளிவந்துள்ளன. தமிழில் இத்துறைகளைச் சார்ந்து முதன் முதலில் எழுதிய முன்னோடி அவரேயாவர். அவரின் பல்துறைச் சார்ந்த கட்டுரைகள் பாரதிதாசனிடத்தில் மிகுந்த தாக்கத்தை உருவாக்கியுள்ளன. இதனால், அவரு டைய கவிதையின் உள்ளடக்கம் சிறப்புப் பெற்றுள்ளது. கவிதைகளின் பாடுபொரு ளும், அறிவியல் பார்வையும் விரிந்துள்ளன.

இந்நூலில் புது உலகம் தொடங்கிப் பொதுவுடைமை ஈறாக உள்ள பதினொரு கட்டுரைகளில் சிங்காரவேலரின் சிந்த னைத் தாக்கம், பாரதிதாசன் கவிதைகளில் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை காட்டியுள்ளன. இங்கு மற்றொரு கருத் தையும் சுட்டிக் காட்டவேண்டிய பொறுப்பு உள்ளது. அதாவது, சிங்காரவேலரின் சிந்தனைகளால் மட்டுமே பாரதிதாசன் இப்படிக் கவிதைப் படைத்துள்ளார் என்று கூறமுடியாது. தந்தை பெரியார், கைவல்ய சாமிகள் போன்றோரின் எழுத்துகளும், சுயமரியாதை இயக்கச் செயற்பாடும் அவ ரிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. காரணம், சுயமரியாதை இயக்கத்தில் பாரதிதாசனும் முன்னணி வீரராக இருந்து செயல்பட்டுள்ளார். கவிஞரும் இயல்பா கப் புதுமை எண்ணமும், புதுமை நோக்கும் கொண்டவர். சுயசிந்தனை உடையவர்

சிங்காரவேலரின் சிந்தனைகளில் பல பாரதிதாசனிடத்தில் புதுப்பொருளாக வெளி வந்திருக்கின்றன. சில சிந்தனைகள் அவருக்குத் தூண்டுதல்களாக இருந்திருக்கின்றன. சில சிந்தனைகள் துணையாக இருந்திருக்கின்றன. இவ்வாறுதான் ஆய்ந்து பார்க்க வேண்டு மேயன்றி சிங்காரவேலரின் சிந்தனைகள் மட்டுமே அவருக்கு வழிகாட்டியாக இருந் திருக்கிறது என்று கூறமுடியாது. அது சரியான ஆய்வாகவும் இருக்கமுடியாது. எது எப்படியிருப்பினும், பொதுவுடைமை சிந்தனைகளுக்குச் சிங்காரவேலர் எப்படி முன்னோடியோ அப்படி இந்நூலில் விரித் துரைக்கப்பட்ட பல கவிதைகளுக்கும் அவரே முன்னோடி எனலாம். சிங்கார வேலரைப்போல் சிந்தனைச் சிற்பி எங் கேனும் கண்டதுண்டோ ? எனத் தொடங் கும் நீண்ட கவிதையைப் படித்தால், சிங் காரவேலர் கவிஞரை எவ்வளவு பாதித் துள்ளார் என்பதை நன்கு உணரலாம். அக்கவிதை, சிங்காரவேலரைப் பற்றிய அரிய பதிவு என்பதால், இந்நூலின் முதல் பக்கத்திலேயே அக்கவிதை அச்சிடப் பட்டுள்ளது. அக்கவிதையைப் படித்து விட்டு, நூலுக்குள் செல்வதே சிறந்தது. அக்கவிதையின் வெளிச்சமே இந்நூல்.

 

சுதந்திரச் சிந்தனை - இராசபாளையம்

வெளியீடு: வைகறை முரசு

சுதந்திரச் சிந்தனைஇதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல், 4 ஆண்டுகள் 28 நிகழ்வுகள், 3 தொகுப்புகளில் வெளியிடப்பட்டு உள்ளன. இராசபாளையம் தமிழ்ச்சங்கம் நடத்தி வந்த இரமணாலயம் நிறுவனர் பூ.லோகநாத ராசா உள்ளிட்டோர் சேர்ந்து இராசபாளையத்திற்கு புதிய தொரு அடையாளமானது. உன்னத மான ஆளுமைகள் வாசிப்பின் ருசி கண்டவர்கள் இந்த இலக்கிய வேடந் தாங்கலில் இளைப்பாறி தங்களைத் திரும்ப திரும்ப உயிர்ப்பித்துக் கொள்ளசுதந்திரச் சிந்தனைநிகழ்ந்தது என லாம்.

இதழில் வெளியான கட்டுரைகள் பன்மைக் குரல்கள் தமிழ்ப்படைப்புல கின் ஆகச் சிறந்த மூளைகளோடு கைகுலுக்க வைத்தன. புத்தகங்களின் உண்மையான பெறுமதி என்ன என் பதை தெளிவாக்கின. உயிரற்ற வாசிப் பில் என்ன பயன்? முறையாக வாசிக்கும் ஒருவரால் மட்டுமே விசாலமனம் பெற்று எல்லைகளைத் தாண்ட முடியும். வாசகனின் மனம் நுண்ணுர்வில் மட் டுமே மய்யப்புள்ளியை உள்வாங்கியதன் கர்வமும், நிராகரிப்பின் நியாயமும் எதற்கென விளங்கும்.

இலக்கியச் செயல்பாடுகளை எதிர் காலத்திலும் சுணக்கமின்றித் தொடரும் வகையில்சுதந்திரச் சிந்தனையைத் தோள் மாற்றும் பணியும் முன்னெடுக் கப்பட்டுள்ளது என்பதனை வெளியான கட்டுரைகள் மூலம் தெளிவாக்கப்பட்டு உள்ளது.

சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வைக்கிறது இதில் வெளியான கட்டுரை கள் அனைத்தும்.

 

பெரியார் பார்வையில் கடவுள்

ஆசிரியர்முனைவர் கருவூர் கன்னல்

வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம்

விலை: 90/-

கடவுள்' என்ற சொல்லினை குறித்து பெரியார் தரும் விளக்கங்களைமுன் னேற்றத்தை நாடும் எந்த மனிதனும் பழைய மதத்தின் ஒவ்வொரு பகுதியையும் அலசி அலசி ஆராய்ச்சி செய்தே தீர வேண்டும். பழைய குருட்டு நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் அவநம்பிக்கை கொள்ள வேண்டும். பழைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் போட்டிக்கழைத்து அலச வேண்டும்“. இது விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் தூக்குத் தண்ட னைக் கைதியாக சிறை அறைக்குள் இருந்து எழுதியநான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்னும் நூலில் இருக்கும் திருவாசகம்.

பகத்சிங் எழுதியதற்கு முன்னரே தந்தை பெரியார் பழைய குருட்டு நம்பிக் கைகள் ஒவ்வொன்றின் மேலும் அவநம் பிக்கை கொண்டார். பழைய கொள்கை களையும் கோட்பாடுகளையும் போட்டிக் கழைத்து அலசி ஆராய்ந்தவர். விளைவு: “மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது. கோயிலுக்குள் போகக்கூடாது. குளங்களில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கின்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்கா மலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ - சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ - பூமியின் பிளவில் அமிழச் செய்யாமலோ - தப்ப விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கடவுள் என்னும் ஒருவர் இருக்கின்றார் என்றும், அவர் நீதிமான் என்றும் - அவர்களை என்னவென்று நினைப்பது? என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனத் தந்தை பெரியார் பொய் வணிகங் களின் முகவரிகளை இந்திய மக்களுக்கு எடுத்துக் காட்டினார். பெரியார் எதையும் சிந்திக்காமல் சொன்னதில்லை. ஆராய்ந்து பாராமல் அரிவித்ததில்லை பெரியார் என் பதை இதுபோன்று ஒவ்வொரு கட்டுரை யின் பேச்சுக்களை எடுத்துக்கூறி விளக்கி யிருக்கிறார். நூலின் ஆசிரியர். படித்து பார்த்து புரிந்துக் கொள்க சமூக தன்மையை.

 

 

Comments