ஏட்டுத் திக்குகளிலிருந்து...

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     இந்தியாவின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது குறைபாடுடைய ஜனநாயகம் இருப்பதாகவும் தி எகானமிஸ்ட் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளதை மூத்தப் பத்திரிக்கையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

·     மோடி அரசு "வெறுப்பு மற்றும் மதவெறி" அரசியலைச் செய்கிறது.  மேலும் நீதித்துறையும் ஊடகங்களும் கூடுதலாக தேசத்தை "தோல்வியுறச் செய்துள்ளன என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்தரா குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை தானே விசாரித்து தீர்ப்பளித்துவிட்டு, இன்று மாநிலங்களவையில் உறுப்பினராக அமர்ந்துள்ளார் என்றும் சாடினார்.

·     குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய பிரதமர் மோடி, போராடும் விவசாயிகள் குறித்துஅந்தோலன் ஜீவி’ (போராட்டம் காரணமாக வாழ்பவர்கள்) என்று கூறியதற்கு விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·             அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெறும் கால் பந்தாட்ட போட்டியானசூப்பர் பவுல்நிகழ்வில், டில்லியில் போராடும் விவசாயிகள் குறித்து 40 வினாடி வெளியிடப்பட்ட விளம்பரத்தில் மக்கள் உரிமைக்குப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின்அநீதி எங்கு நடப்பினும் அது அனைத்து இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தல் என்பதாகும்என்ற கூற்றை மேற்கோள் காட்டி, சிட்டி ஆஃப் ஃப்ரெஸ்னோ மேயர் ஜெர்ரி டையர் 'நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - இந்தியாவில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளே - நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்' என்று பேசும் விளம்பரம் வெளியிடப்பட்டது.

தி டெலிகிராப்:

·     பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில், போராடும் விவசாயிகள் குறித்து "அந்தோலன் ஜீவி" மற்றும் ஒட்டுண்ணிகள் என்றும் "வெளிநாட்டு அழிவு சித்தாந்தம்" பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி பேசியதும், ஜெர்மனியில் நாஜியினர் பயன்படுத்திய வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது.

- குடந்தை கருணா

9.2.2021

Comments