ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமண விழா - பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

குடந்தை ஜி.இராதாகிருஷ்ணன்- ரேணுகா மகன் இரா.வெங்கட்ராமன் - மதுரை ராமர்-கனி  மகள் இரா.கனகலட்சுமி  ஆகியோரது ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமண விழா 14-02-2021 காலை 10.00 மணியளவில் குடந்தை பாலாஜி மகாலில் குடந்தை காந்தியடிகள் நற்பணிக் கழக அமைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில். திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் வை.இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது.  விழாவில் தஞ்சை மண்டல செயலாளர் .குருசாமி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, பெருநகர தலைவர் கு.கவுதமன், பெருநகர செயலாளர் பீ.இரமேஷ், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் மு.திரிபுரசுந்தரி, திருவிடைமருதூர் (தெ) ஒன்றிய செயலாளர் .சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மணவிழா முடிந்தவுடன் மணமக்கள் குடந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர்.

Comments