இவர்தான் கேரள மாநில பா.ஜ.க.வின் முதல் அமைச்சர் வேட்பாளராம்!

பாஜகவின் முதல்வர் வேட்பாளர் என்று கேரளத்தில் அறிவிக்கப்பட்ட .சிறிதரன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் "நான் இறைச்சி சாப்பிடு பவர்களை விரும்பமாட்டேன்" என்று கூறியுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் இந்தியாவில் மாட்டிறைச்சி அதிகம் உண்பவர்கள் வாழும் மாநிலம், கேரளா, அங்கு 88 விழுக்காடு மக்கள் இறைச்சி உண்பவர்களாக 'கிரஹ சோபா' என்ற மாத இதழ் 2018 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களோடு வெளியிட்டுள்ளது, அப்படி இருக்க பாஜகவின் கேரள முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டவர் நான் இறைச்சி சாப்பிடுபவர்களை விரும்பமாட்டேன் என்று வெளிப்படையாக சொல்கிறார். அப்படியே இறைச்சி சாப்பிடுபவர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கூறினால் நலமாக இருக்கும், கூறுவாரா?

Comments