பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு: பாஜ-அதிமுக அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, பிப்.18- பெட்ரோல், டீசல் - சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்க வைத்திருக்கும் பாஜ-அதிமுக அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக விலை குறைப்பு செய்ய வலியுறுத்தியும், திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று (17.2,2021) வெளியிட்ட அறிக்கை வருமாறு:

சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.787.50-க்கு உயர்த்தி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக இல்லத்தரசிகளுக்கு ஒருஅதிர்ச்சிபரிசை அளித்து விட்டுச் சென்றது வேதனையளிக்கிறது. சமையல் எரிவாயு உருளை விலை மற்றும் பெட்ரோல் டீசல் விலையையும் கண்மூடித்தனமாகச் செங்குத்தாக உயர்த்தி வரும் பாஜ செயல் கடும் கண்டனத்திற்குரியது. அதிமுகவின் ஆட்சியில் இன்றைக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91.19 ரூபாய். டீசல் விலை 84.44 ரூபாய். முரட்டுத்தனமான இந்த விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது.

மத்திய பா.. அரசு பெட்ரோல் - டீசல் மீது 20 லட்சம் கோடி ரூபாய்க்குக் கலால் வரி விதித்தது முதல் காரணம் என்றால் - .தி.மு.. அரசு - அதுவும் முதலமைச்சர் பழனிசாமி, கரோனா காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் அதிகரிக்கும் வகையில்வாட் வரிவிதித்தது இந்த விஷம் போன்ற விலை உயர்விற்கு மற்றொரு காரணம்.

எனவே, வரலாறு காணாத பெட்ரோல் - டீசல் விலை, சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டும் காணாமலும் இருக்கும் அதிமுக - பாஜக அரசுகளைக் கண்டித்தும் - கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மத்திய பா. அரசு மேற்கொண்டு மக்களின் இன்னல்களைப் போக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், திமுக சார்பில் பிப்ரவரி 22ஆம் நாள் (திங்கள்கிழமை) அன்று காலை 9 மணி அளவில், மாவட்டச் செய லாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் மகளிர், வணிகர்கள், சரக்குப் போக்குவரத்து தொழிலில் உள்ளோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொள்ளவேண்டும் அனைவரையும் திமுக சார்பில் அழைக்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments