சிவகங்கை, பிப். 6- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற் றும் திருப்பத்தூரில் பேருந்து நிலையம் பயணிகளிடமும் - கடைவீதியிலும் தலைமைக் கழக வெளியீடான “மயக்க பிஸ்கெட்டு”கள் நூல்கள் வழங்கப்பட்டன.
சிங்கம்புணரியில் மாவட் டச் செயலாளர் பெரு.இராசா ராம் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் ஜெ.தனபாலன் நூல் வெளியிட, பெரியார் பெருந்தொண்டர் இராவணன் பெற்றுக் கொண் டார்.
திருப்பத்தூரில் மாவட்ட துணைத்தலைவர் ஜெ.தன பால் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் கவிஞர் தங்கராசன் வெளியிட வைகைத் தமிழ்வாணன் பெற்றுக் கொண்டார்.
இரு ஊர்களிலும் கடை வீதிகளிலும் மற்றும் பல ஊர் பொதுமக்கள் சந்திக்கும் பேருந்து நிலையத்திலும் அதிகமாக நூல்கள் வழங்கப்பட்டன.