ஏட்டு திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்னடைந் தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தெலங்கானா அரசு ஆணைப் பிறப்பித்தாலும், கூடுதல் இடங்களை அரசுப் பணியிலும் கல்வி நிலையங்களிலும் அளிக்க வேண்டும் என்பதால் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     வருங்கால வைப்பு நிதி அரசுப் பணியாளரின் உரிமை, அரசின் பெருந்தன்மையால் தரப்படும் நிதி அல்ல. அரசு உரிய விதிகளை அரசு பின்பற்றி பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     பிரதமர் மோடியின் கோவைப் பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., மோடி, இ.பி.எஸ். ஆகியோரது கட் அவுட் படங்களுடன் காமராஜர் கட் அவுட் வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

தி டெலிகிராப்:

·     விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் குறியீடுகளை செலுத்துவதற்கு கோவிட்-19 போன்ற "ஒரு நல்ல நெருக்கடியை" நரேந்திர மோடி அரசாங்கம் பயன்படுத்தியுள்ளதாகவும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கம் இந்த கடினமான காலங்களில் இந்த சட்டங்களை எதிர்க்க முடியாமல் போகும் என தப்புக் கணக்குப் போட்டுள்ளது மோடி அரசு என பத்திரிகையாளர்-ஆர்வலர் பி. சாய்நாத் கூறியுள்ளார்.

·  விதிகளை மீறி மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்றதற்காக உத்தரபிரதேசத்தில் 132 மருத்துவ மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக சமூக சேவைகளை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஒரு முன்னு தாரணமாக கருத முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. நீதிபதி கள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கின் விசித்திரமான சூழ்நிலையில் அய்ந்தாண்டு எம்பிபிஎஸ் பாடநெறியின் இரண்டாம் ஆண்டை ஏற்கெனவே முடித்த மாணவர்களின் சேர்க்கைகளை ரத்து செய்வதால் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான ஆன்லைன் / மெய்நிகர் பன்னாட்டு மாநாடுகள் மற்றும் கருத்த ரங்குகள் நடத்துவதற்கான இந்திய அரசின் புதிய வழிகாட்டு தல்கள் குறித்து தனது எதிர்ப்பை எழுப்பிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பிரதமர் நரேந்திர மோடியிடம் "ஒரே தேசம், ஒரே சிந்தனை என திணிக்க முயற்சிக்கிறீர்களா" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

26.2.2021


Comments