குடந்தை, கன்னியாகுமரி, சென்னை பகுதிகளில் விடுதலை சந்தா

குடந்தை கழக மாவட்டம் திருப்பந்துறை சுயமரியாதை சுடரொளி பி.ஜோசப் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஏழு விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.7,200 திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் சங்கர் வழங்கினார் உடன்: குடந்தை கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மண்டல செயலாளர் .குருசாமி (06.02.2021).  விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் நாகர்கோவில் கண்ணையா விடுதலை நாளிதழுக்கு சந்தாவும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மேனாள் செயலாளர் சம்சுதீன் ஒரு விடுதலை சந்தாவும்  பெண்ணிய சிந்தனையாளர் நாகர்கோவில் பரிமள செல்வி  விடுதலை நாளிதழுக்கு  சந்தாவும் திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தனிடம் வழங்கினர். கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களிடம் ஒரு விடுதலை சந்தாவை வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன் வழங்கினார் (6.2.2021)

Comments