காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் திஷா ரவி கைது

எதிர்க்கட்சிகள் கண்டனம்

சென்னை, பிப்.16 பெங்களூரைச் சேர்ந்த 22 வயதான காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்  திஷா ரவியை டில்லி காவல்துறை கைது செய்தது.

இதற்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களை எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பதிவில்:  இந்தியா வின் குரலை அடக்க முடியாது" என்று பதிவிட்டார்.

திமுக தலைவர் தளபதி மு.. ஸ்டாலின்: ”திஷா ரவியின் கைது நடவடிக்கை என்னை அதிரிச்சியடைய வைக்கிறது. அரசை விமர்சிப்பவர்களை சர்வாதிகார போக்கின் மூலம் மவுனமாக்குவது சட்டவிதிமுறைகளை கிடையாது. இதுபோன்ற தண்டனை நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, கருத்து வேறுபாடுகளை உரிய முறையில் தீர்த்துக் கொள்ள மத்திய பாஜக அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

தொல். திருமாவளவன் தனது சுட்டுரைப் பதிவில்: “சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளர் திஷாரவி அவர்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக சுட்டு ரையில் கருத்துப் பதிவு செய்தார் என்பதற்காக அவரை டில்லியில் அமித்ஷாவின் காவல்துறையினர் கைது செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை உடனே விடுதலை செய்யவேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

மேனாள் மத்திய நிதியமைச்சர்

. சிதம்பரம் தனது சுட்டுரைப் பதிவில்: “திஷா ரவி கைது செய்யப்பட்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சர்வதிகார போக்குக்கு எதிராக அனைத்து மாணவர்களும், இளை ஞர்களும் குரல் எழுப்ப வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்க உருவாக்கப்பட்ட வழி காட்டி கையேடு ஆவணம் (டூல் கிட்) இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனப் படையினரை விட மிகவும் ஆபத்தானதா?

22 வயது நிரம்பிய மவுண்ட் கார்மல் கல்லூரி மாணவரும், காலநிலை ஆர்வலருமான திஷா ரவி தேசத்தின் பாதுகாப்புக்கு அச் சுறுத்தலாக எடுத்துக் கொள்ளப் பட்டால், இந்திய அரசு பலவீனமான அடித்தளத்தில் நின்று கொண் டிருக்கிறது என்று பொருள். இந்தியா அபத்தமான நாடகமாக மாறி வரு கிறது. டில்லி காவல்துறை ஒடுக்கு முறையாளர்களின் கருவியாக மாறியது வருத்தமளிக்கிறது" என்று பதிவிட்டார்.

Comments