காவிரியின் உபரிநீரைப் பயன்படுத்துவதா?

ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்கமாட்டோம்

எடியூரப்பா மிரட்டல்

பெங்களூரு, பிப். 23 காவிரியின் உபரிநீரை குண்டாற் றோடு இணைக்கும் திட் டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கருநாடக முதல்வர் எடியூரப்பா இந்த திட் டத்தை நடைமுறைப் படுத்த முயன்றால் தமிழகத் திற்கு ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என்று மிரட்டியுள்ளார்.

காவிரி, வைகை, குண் டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் விதமாக ரூ.14,400 கோடி செலவில் நதிகள் இணைப்பு திட் டத்தை நேற்று முன்தினம் (21.2.2020) தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனி சாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

காவிரியில் உபரியாக வெளி யேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலி ருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாகக் குண்டாற் றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறை வேற்றப்படும்.

முதல் கட்டத் திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக் கோட்டை ஆகிய மாவட் டங்களில் 342 ஏரி களும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ. நீளத்திற்குக் கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக் கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப் பட உள்ளது.

இதற்கிடையே, தமிழ கத்தில் தொடங்கப்பட் டுள்ள காவிரி, வைகை, குண்டாறு ஆகிய 3 நதி களையும் இணைக் கும் திட்டத்திற்கு கருநாடகத் தில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. இந்த விவகாரம் குறித்து பெங் களூருவில் முதல் வர் எடியூரப்பாவிடம் செய்தி யாளர்கள் கேள்வி எழுப் பினர்.

அப்போது பதிலளித்த எடியூரப்பா, காவிரி ஆற் றின் உபரி நீரை பயன்படுத் துவ தற்காக தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களை செயல் படுத்த கருநாடகம் ஒருபோதும் அனு மதிக்காது. அதற்கான வாய்ப்பே இல்லை.

காவிரியில் தமிழ்நாட் டுக்கு கூடுதலாக நீரை வழங்கவும் சாத்தியமில்லை. எனது தலை மையிலான அரசு, அதற்கு வாய்ப்பளிக்காது. நான் இருக் கும் வரை இந்த திட்டத்தை எதிர்ப்பேன், எனது மக்களின் வாழ்வாதாரம் எனக்கு முக் கியம் ஆகையால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டேன், காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழ்நாடு நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Comments