ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

ராமன் கோயில் நிதி வசூல் என்ற பெயரில் பாஜக ஹிந்துத்துவா அரசியல் செய்கிறது என மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அரசின் வெளியுறவு அதிகாரியுமான பவன் கே.வர்மா குறிப்பிட்டுள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

போதைப் பொருள் வைத்திருந்ததாக மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட பாஜக இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி, அக்கட்சியின் மா நிலத்தலைவரின் உதவியாளர் ராகேஷ் சிங் மீதும் சிபிஅய் நடவடிக்கை எடுத்திடவும், தன் மீது சதி செய்து மாட்டி விட்டதாகவும் கூறியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்தும், அசாமில் ஏற்கெனவே இருந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரியும் அஸ்ஸாம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கோடி போராட்டம் நடத்திட அனைத்து அசாம் மாணவர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தி டெலிகிராப்:

·     மேற்கு வங்க தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநிலத்தின் மகள் மம்தா என்றும் பாஜகவை அந்நியர்கள் கட்சி என்றும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்:

·     மத்திய அரசு மாநில அரசுகள் மீது சட்டங்களை திணித்திடும் போக்கை நிறுத்தி, மா நிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை மாநில அரசுகள் செயல்படுத்திட உரிய கூட்டாட்சியை நடைமுறைப்படுத் தினால், வேளாண் குறித்த சட்டங்கள் இயற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது என பேராசிரியர் திவேஷ் கபூர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

21.2.2021

Comments