நான்காவது தூணை நொறுக்கும் பாசிச பா.ஜ.க.

சமூக ஊடகங்கள் தற்போது ஆட்சியைக் கவிழ்க்கக் கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறிவிட்டன. இதனை ஓழுங்குபடுத்தும் வகையில் விரைவில் சட்டம் இயற்றப்பட வேணடும் என்று பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

இவர்  ஆர்.எஸ்.எஸின் மேனாள் தேசிய செயலாளர். மத்திய பா... ஆட்சியின் செயல்பாட்டைக் கவனிக்க ஆர்.எஸ்.எஸால், மூவர் குழுவில்  நியமிக்கப்பட்ட இவரும் ஒருவர்.

தான் எழுதியஏனெனில் இந்தியா முதலில் வருகிறது (‘Because India Comes First’) என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசிய அவர்,  அரசியல் சார்ந்தமற்றும்அரசு சாராசக்திகளின் எழுச்சியுடன் ஜனநாயகம் புதிய சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் சமூக ஊடகங்கள் அரசாங்கங்களை கவிழ்க்கக் கூடிய அளவிற்குச் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறிவிட்டன. தற்போது ஊடகங்கள் நல்லதைக் கற்பிப்பதை விட அராஜகத்திற்கு வழிவகுக்கும் செயல்களுக்கே அதிகம் உதவுகின்றன. இதனால் நாட்டில் ஜனநாயகம் பலவீனமாகியுள்ள நிலையில், இதே நிலை நீடித்தால், அது நாட்டில், ஜனநாயகத்தை காணாமல் செய்துவிடும். அந்த நிலை வராமல் தடுப்பதற்கும், இதனை சமாளிப்பதற்கும், அரசமைப்பு கட்டமைப்பிற்குள் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தவும், அதன் மூலம் பரவும் நாட்டிற்கு எதிரான கருத்துக்களை சமாளிக்கவும், நிர்வகிக்கவும் நமக்குப் புதிய விதிகள் மற்றும் புதிய சட்டங்கள் தேவைப்படுகின்றன. அரசு ஏற்கெனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் இந்திய சட்டத்தை பின்பற்றும்படி கேட்டுக்கொண்டது தொடர்பாக அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில் தற்போது மாதவ் தனது கருத்தை இவ்வாறு முன் வைத்துள்ளார். நாட்டிற்கு எதிரான கருத்துக் களை நீக்கவும், கருத்துக்களைப் பதிவிடும் நிலையை ஒழுங்குபடுத்தவும், ஒரு சட்டத்தை உருவாக்கக்கோரி 'ட்விட்டர் இந்தியா' நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுக் கப்பட்டது. மேலும் ட்விட்டர் இந்திய நிறுவனம், இந்தியா வுக்கு எதிரான கருத்துக்களை ஊக்குவித்ததற்காக அவர்க ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவ காரத்தில் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு தாக்கீது அனுப்பியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம்மாதவ், தனது புத்தகத்தில் தனது பார்வையில் மோடி அரசாங்கத்தின் பல முடிவுகள் குறித்து எழுதியுள்ளார்.

இதனடிப்படையில் ஒருவழியாக பாஜக அரசு அனைத்துப் பெரும்பான்மை ஊடகங்களையும் வளைத்துப் போட்டுவிட்டது, இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர் விவகாரம், பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் சரிவு, தொழில் துறை முடக்கம், சட்டமன்ற உறுப்பினர்களை பெரும் தொகைக்கு வெளிப்படையாக பேசி வாங்குவது போன்றவற்றையும் தற்போது லட்சக்கணக்கான விவசாயிகள் டில்லியில் 3 மாதங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்தெல்லாம் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. வரலாற்றில் நீண்ட காலப்போராட்டம் என்று பிபிசி ஊடகத்தால் எழுதப்பட்ட விவசாயிகள் போராட் டத்தை அப்படியே மறைத்து, சாமியார் ராம்தேவ் தனது பதஞ்சலி மருந்தை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக் கொண்டது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் முன்பே பொய் சொல்கிறார், அதையும் இரண்டு அமைச்சர்களும் வேடிக்கை பார்க்கின்ற னர். இந்திய ஆயுஷ் அமைச்சரகமும் இதை ஓர் அறிக்கையாக வெளியிடுகிறது, உடனடியாக நாடுமுழுவதும் அந்த பொய் செய்தியை ஊடகங்கள் இரவு பகலாக பரப்பி வருகின்றன. இந்த நிலையில் ராம்தேவின் கரோனா மருந்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறிய பிறகும் பெரும்பான்மை ஊடகங்கள் இது குறித்து எதுவுமே பேசவில்லை. சமூக வலைதளங்களில் மட்டுமே இந்தச்செய்தி வெளி வந்துள்ளது. ஆகையால் தான் தற்போது சமூக வலைதளங்களையும் முடக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். மேனாள் செயலாளரும் பாஜகவின் முக்கியத்தலைவர்களுள் ஒருவருமான ராம் மாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது. நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்களைத் தன் கால் கட்டை விரலின்கீழ் நிறுத்துவது பாசிசத்தின் பச்சையான அடையாளமாகும். அறிந்து கொள்ளட்டும் வெகு மக்கள்.

Comments