விவசாயிகள் போராட்டம் குறித்து மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் சிபிஎஸ்இ பள்ளி : கல்வியாளர்கள் கண்டனம்

சென்னை, பிப். 22 சென்னையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி. பள்ளி ஒன்று பத்தாம் வகுப்பு பயிற்சி தேர் வில் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கேள்வி கேட்கப்பட்டுள்ளதோடு மாணவர் களை விவசாயிகளுக்கு எதிராக தூண்டிவிடும் விஷம பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது, இது பெற்றோர் மற் றும் பொதுமக்களிடையே அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக  மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடி வரும் நிலையில் அவர் களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிந்து வருகின்றனர். இதற்கு உலகம் முழுக்க உள்ள பிற துறை சார்ந்தவர்களிடமும் ஆதரவு பெருகிவருதோடு இந்த கருத்து பதி வுகள் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான ஆயுதமாக மாறி வருகிறது.

விவசாயிகள் அளவில் மட்டுமே இருந்த போராட்டம், நாளுக்கு நாள் உலக அளவில் கவனத்தை ஈர்ப்பது அரசுக்கு தலைவலியை ஏற்படுத்திய தால் சமூக வலைதளங்களில் இது போன்ற கருத்தாயுதங்களை கையாள் வோர்மீது வழக்குப் பதிந்து அவர் களுக்கு   உதவி செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விவசாயிகளை வன் முறை வெறிபிடித்தவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.

தனது பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடந்த பயிற்சி தேர்வில் தூண்டுதலின் பெய ரால் சுயலாபத்துக்காக போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபடும் வன் முறை வெறிபிடித்தவர்களின் செயலை கண்டித்து உங்கள் நகரின் பிரபல பத்திரிகையின் ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை எழுதுக என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

இதனை பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்தை அனுகியபோது மாணவர்கள் தவிர யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று நிர்வாகம் உத்தரவிட் டிருப்பதாக கூறினர், தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டபோதும் விளக்கம் எதுவும் தரப்படவில்லை.

வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நடந்து வரும் போராட்டம் குறித்து மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி வரு கிறது. இந்நிலையில், மாணவர்களை கேடயமாக பயன்படுத்தி விவசாயிகளை வன்முறையாளர்களாக சித் தரிக்கும் விஷம பிரச்சாரத்தில் இறங்கி இருக்கும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சி.பி.எஸ்.சி. கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Comments